தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Bhagavan: குரு அக்டோபர் கொட்டுவார்.. வாரிக் கொள்ளும் ராசிகள்.. என்ன நடக்க போகுது?

Guru Bhagavan: குரு அக்டோபர் கொட்டுவார்.. வாரிக் கொள்ளும் ராசிகள்.. என்ன நடக்க போகுது?

Sep 13, 2024, 03:12 PM IST

google News
Guru Bhagavan: குரு பகவானின் வக்ர நிலை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Guru Bhagavan: குரு பகவானின் வக்ர நிலை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagavan: குரு பகவானின் வக்ர நிலை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Bhagavan: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி என்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைகின்றார்.

குரு பகவானின் வக்ர நிலை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தனுசு ராசி

குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் வக்கிர நிலை அடைகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். 

அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேலைகளில் உங்களுக்கு வெற்றி அதிகரிக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களை தேடி வரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் வக்ர நிலை அடைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். முக்கிய இடங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பல லட்சியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு இருக்கும். உயர்கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். 

உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திடீரென பண வரவு அதிகரிக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு முழுமையான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனித மற்றும் கூட்டுத் தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி