ஏழரை சனியில் சிக்கிய ராசிகள்.. ராகு 2025 முதல் கஷ்டப்படுத்தி கதற விடுவார்.. கண்ணீரை நிறுத்த முடியாது.. கொஞ்சம் கவனம்!
Nov 07, 2024, 12:24 PM IST
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நெருக்கடியை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Rahu: நவக்கிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.
சமீபத்திய புகைப்படம்
இந்நிலையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் ராகு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நெருக்கடியை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு மோசமான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது. மன ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். எடுத்துக் கொண்ட காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகும். வருமானத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகளை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு சேமிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கடக ராசி
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான எதிர்மறையான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் வாழ்க்கை துணையோடு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்பத்தில் திட்டமிட்ட காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகும்.
அனைத்து விஷயங்களிலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தீவிரமான சூழ்நிலைக்கு கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது. மன அழுத்தம் மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சூழ்நிலைகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வது நல்லது. இல்லையென்றால் பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களை தேடுகிறோம்.
மீன ராசி
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு நல்ல முறையில் இந்த முறை அமையவில்லை. உடல் ரீதியாக நீங்கள் சிக்கல்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மனரீதியாக பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பல தடைகள் ஏற்படக்கூடும். நிதி நெருக்கடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தப்பிக்க முடியாத பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படக்கூடும்.
செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கச் சற்று தாமதமாகும். நிதி நிலைமையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்கள் உங்களுக்கு வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளை உண்டாக்கும். நண்பர்களிடையே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு அமைதியாக இருந்தால் குடும்ப மகிழ்ச்சியாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.