கும்பத்தில் நுழையும் ராகு பகவான்! 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா? ராகு பெயர்ச்சி பலன்கள்!
Rahu Peyarchi 2025: தற்போது 18 மாதங்களுக்கு பிறகு வரும் 2025-ஆம் ஆண்டு மே மாதம் சனி பகவானின் ராசியான கும்பம் ராசிக்கு செல்ல உள்ளார்.
வரும் 2025 ஆம் ஆண்டில் பல கிரக மாற்றங்கள் நடைபெற உள்ளது. இந்த மாற்றங்கள் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பல்வேறு பலன்களை கொடுக்க உள்ளது. குறிப்பாக மீனம் ராசியில் இருக்கும் ராகு பகவான் கும்பம் ராசிக்கு 2025ஆம் ஆண்டில் பெயர்ச்சி ஆக உள்ளார். சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு - கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வக்ர நிலையில் பெயர்ச்சி ஆவது வழக்கம்.
தற்போது குரு பகவானின் வீடான மீனத்தில் இருக்கும் ராகு பகவான், சனி பகவானின் வீடான கும்பம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேஷம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். தற்போது 18 மாதங்களுக்கு பிறகு வரும் 2025-ஆம் ஆண்டு மே மாதம் சனி பகவானின் ராசியான கும்பம் ராசிக்கு செல்ல உள்ளார்.
கும்பத்தில் ராகு சஞ்சரிப்பது பல ராசிக்காரர்களுக்குப் பிரச்சனையாக இருந்தாலும் பல ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். ராகு கும்ப ராசியில் நுழையும் போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இப்போது கூறுவோம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவானின் பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கும். சிறுசிறு மன அழுத்தங்கள் வந்து போகும். ஆனால் அதே நேரத்தில் புதிய பணவரவுக்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் சிந்தனைகள் சீராகி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் தொழில் நன்றாக இருக்கும். சிலருக்கு பணியிடங்களில் வேலை மாற்றங்கள் அல்லது இடமாற்றங்கள் உண்டாகலாம். புதிய செயல்களில் தடங்கள்கள் ஏற்பட்டாலும், தடைகள் விலகி நன்மைகள் பிறக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி சுப பலன்களை தரும். அதே நேரம் பணியிடங்களில் சற்று கவனமாக செயல்பட வேண்டும். கடும் பணி சுமைகளில் இருந்து விலகி ஓய்வு எடுக்க நேரம் ஒதுக்குவீர்கள். சமூகத்திலும், குடும்பத்திலும் உங்கள் பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சிக்கு பிறகு பணம் தொடர்பான பிரச்னைகள் அகலும். புதிய வருவாய் ஆதாரங்கள் உண்டாகும். ஏழைகளுக்கு உணவு அளித்து உதவுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.