கெட்ட நேரம் தொடங்கிய ராசிகள்.. ராகு துரத்தி துரத்தி அடிக்க போகிறார்.. 2025 முதல் ஆப்பு ரெடி
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் கஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Rahu: நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 09:00 PMMarch 17 Tomorrow Rasipalan : வாரத்தின் முதல் நாளான மார்ச் 17 க்கான ராசிபலன் என்ன?
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் ராகு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கும்ப ராசியில் நுழைகிறார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் கஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு பல மோசமான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது. வரும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு சிக்கலாக இருக்கும். மன ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வருமானம் உங்களுக்கு பாதிக்கப்படும். நிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வியாபாரத்தில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடியக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் செலவுகள் அதிகரிக்கக்கூடும். குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கடக ராசி
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை உங்களுக்கும் மோசமான சூழ்நிலைகளை கற்பிக்கும்.
குடும்பத்தில் திட்டமிட்ட வேலைகள் நடப்பதற்கு சற்று தாமதமாகும். அனைத்து விஷயத்திலும் நீங்கள் அதிக கவனம் செலுத்தி செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தை நீங்கள் மிகவும் கவனித்துக் கொள்ள வேண்டும். சில விஷயங்கள் உங்களுக்கு தீவிரமான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்த விஷயங்களை சரியாக கையாள்வது நல்லது. நிதி ரீதியாக மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மீன ராசி
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு நல்லதாக அமையவில்லை. வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனரீதியாக உங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும். தொழிலில் நிதி நெருக்கடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் மிகவும் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். செலவுகள் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக இருக்கக்கூடிய உடல் ஆரோக்கியத்தில் மோசமான சூழ்நிலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
