Kettai Natchathiram: கோட்டை கட்டுமா கேட்டை நட்சத்திரம்! உண்மை என்ன? கேட்டை நட்சத்திரத்தின் குணநலன்கள் இதோ!
Aug 30, 2024, 09:22 PM IST
கேட்டையில் பிறந்தால் கோட்டையில் வாழலாம், கேட்டை நட்சத்திரம் கேடுகளை விளைவிக்கும் என்ற இரண்டு பழமொழிகள் கேட்டை நட்சத்திரம் குறித்த வாக்கியங்களாக உள்ளது. கேட்டை நட்சத்திரம் ராட்ச கண நட்சத்திரம் ஆகும். இதன் அதிதேவதையாக இந்திரன் உள்ளார்.
புதன் பகவான் உடைய நட்சத்திரம் ஆன கேட்டை நட்சத்திரம் செவ்வாய் பகவானுக்கு உரிய விருச்சிகம் ராசியில் முழு நட்சத்திரமாக விளங்குகின்றது. கேட்டையில் பிறந்தால் கோட்டையில் வாழலாம், கேட்டை நட்சத்திரம் கேடுகளை விளைவிக்கும் என்ற இரண்டு பழமொழிகள் கேட்டை நட்சத்திரம் குறித்த வாக்கியங்களாக உள்ளது. கேட்டை நட்சத்திரம் ராட்ச கண நட்சத்திரம் ஆகும். இதன் அதிதேவதையாக இந்திரன் உள்ளார்.
சமீபத்திய புகைப்படம்
செவ்வாயும், புதனும்!
போர் குணம் கொண்ட விருச்சிகம் ராசிக்குள் அதிகபுத்தி கொண்ட புதனின் நட்சத்திரமான கேட்டை உள்ளது. விருச்சிகம் ராசிக்கு இயற்கையாகவே சூழ்சுமமான அறிவு உண்டு, அந்த அறிவில் அதி சூழ்ச்சுமமான அறிவுகளை கொடுக்கும் நட்சத்திரமாக கேட்டை உள்ளது.
பிடிவாத குணமும்! ஆக்ரோஷமும்!
இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பிடிவாத குணம் இயற்கையாகவே இருக்கும். தான் நினைத்ததை செய்தே தீர வேண்டும் என்ற ஆக்ரோஷம் இயல்பாகவே இருக்கும். இவர்களின் இளமை காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.
வைராக்யமும், பிடிவாத குணமும் கொண்ட இவர்கள் சற்று பொறுமையை கடைப்பிடித்தால் எதையும் சாதிக்க முடியும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் குணமாக நிதானம் உள்ளது. கேட்டை நட்சத்திரக்காரர்கள் அவசரப்பட்டால் சிக்கல்க உண்டாகும் நிலை ஏற்படும். நிதானத்தை கைக்கொண்டால் வெற்றிகள் கிடைக்கும்.
நிதானம் இருந்தால் வெற்றியை சுவைக்கலாம்!
அதீத வேகம், சீற்றம், குறுக்குபுத்தி ஆகிய தன்மைகள் இவர்களுக்கு உண்டு. குறுக்கு வழியை தேடி போகும் தன்மை இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. ஆனால் இவர்களுக்கு உள்ள வைராக்கிய குணத்தை இயற்கையாகவே பயன்படுத்திக் கொண்டால் வளர்ச்சி பாதையில் கேட்டை நட்சத்திரக்காரர்கள் பயணிக்கலாம்.
நட்பில் மிக கவனம்
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இளமையில் தவறான நட்பு சேர்க்கை மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் நிலை உண்டாகும் என்பதால் எச்சரிக்கை உடன் நடந்து கொள்வது முக்கியம். பிறந்த ஊரை விட்டு தள்ளி வரும் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பெரும் யோகங்கள் கிடைக்கும். தான் பிறந்த ஊரிலேயே இருக்கும் போது அவ்வளவு பெரிய வளர்ச்சியை பெற முடியாது. இந்த நட்சத்திராகாரர்கள் வாழ்வில் வெற்றி பெற இடமாற்றம் முக்கியமானது ஆகும்.
யோகா, விளையாட்டுக்களில் ஆர்வம்
ஆக்ரோஷமான நட்சத்திரமான கேட்டை நட்சத்திரக்காரர்கள் சண்டைக்கு முந்தி நிற்பார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோகா, தியானம், விளையாட்டு உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் தங்களின் ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். சந்திரன் நீசம் பெறும் ராசி விருச்சிகம் என்பதால் மனதை வசப்படுத்திக் கொள்ள தவறினால் நிச்சயமாக தவறான வழிகளில் சென்றுவிடும் விதி இவர்களுக்கு உண்டாகும்.
காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் கேட்டை நட்சத்திரக்காரர்களின் வாழ்கை சிறக்கும். மற்றவர்களுக்கு கட்டுப்படுவதை விரும்பாத இவர்கள் கூடுமான வரை சுயதொழில் புரிந்து அதில் வெற்றி அடைய விரும்புவார்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!