Today Rasipalan (10.03.2024): இந்த நாள் உங்களுக்கு எப்படி?..மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Mar 10, 2024, 06:33 AM IST
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 10) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் மார்ச் 10 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். புதிய திட்டத்தை தொடங்குவதை இன்று தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு ஏற்படும்.
ரிஷபம்
கடின உழைப்பால் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். ஆசை நிறைவேறும் .
மிதுனம்
அனைத்து முயற்சிகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர் களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். இழந்ததை மீட்பீர்கள்.
கடகம்
புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. மறைமுக தொந்தரவு உண்டு.
சிம்மம்
புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.நண்பருடன் பழைய தகராறு தீரும் வாய்ப்பு உண்டு. துணிச்சலான செயல்படுவீர்கள்.
கன்னி
சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். திறமை வெளிப்படும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தன்னம்பிக்கை பிறக்கும்.
விருச்சிகம்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். எதிர்பார்த்த பணம் கிடைத்தாலும் அதற்கேற்ப எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். சந்தோஷம் நிலைக்கும். பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம்.
தனுசு
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அன்புத் தொல்லை ஏற்பட வாய்ப்பு உண்டு.
கும்பம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். தடைகள் உடைபடும் நாள்.
மீனம்
வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. புதிய முயற்சி சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும். எல்லா விஷயத்திலும் இன்று பொறுமை தேவை .
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்