தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (08.03.2024):'விடிவு காலம் பிறக்குமா?'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (08.03.2024):'விடிவு காலம் பிறக்குமா?'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

Mar 08, 2024, 05:00 AM IST

google News
Today Horoscope: மஹா சிவராத்திரி நாளான இன்று (மார்ச் 08) ஒவ்வொரு ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Horoscope: மஹா சிவராத்திரி நாளான இன்று (மார்ச் 08) ஒவ்வொரு ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Horoscope: மஹா சிவராத்திரி நாளான இன்று (மார்ச் 08) ஒவ்வொரு ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

'சிறப்பான நாள் மக்களே.. செல்வம் தேடி வரும்.. கவனமா முடிவெடுங்க' இன்று டிச.24 மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளின் பலன்கள்!

Dec 24, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.24 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 23, 2024 04:55 PM

’உங்கள் நட்சத்திரம் தெரியும்! நட்சத்திர அதிபதி தெரியுமா?’ நவகிரகங்களும்! நட்சத்திர அதிபதிகளும்!

Dec 23, 2024 04:36 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.24 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன் இதோ!

Dec 23, 2024 04:27 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்குமா?

Dec 23, 2024 11:39 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. காதல் வாழ்க்கையில் இந்த வாரம் ஜாக்பாட் யாருக்கு?

Dec 23, 2024 11:18 AM

மேஷம்

குழப்பம் விலகும் நாள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தெளிவு பிறக்கும். எதையும் சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும்.

ரிஷபம்

சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் புரிதல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

மிதுனம்

எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கலைத்துறையில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வழக்குகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.

சிம்மம்

உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதியில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டு.தடுமாற்றம் குறையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.

கன்னி

பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் சேமிப்பு குறையும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நட்பு நிறைந்த நாள்.

துலாம்

நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பிரச்னைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

விருச்சிகம்

உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய நம்பிக்கை பிறக்கும். சில பிரச்னைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உதவி நிறைந்த நாள்.

தனுசு

திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். புதுவிதமான வியூகங்களை அறிவீர்கள்.

மகரம்

உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சேமிப்பு சார்ந்த ஆலோசனை கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். பயனற்ற வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அமையும்.

மீனம்

குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். நிதானமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு உண்டாகும். இறை வழிபாடு சார்ந்த பயணங்கள் கைகூடும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி