Today Rasipalan (04.03.2024): ‘துயரம் விலகும்..மாற்றம் ஏற்படும்’ - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Mar 04, 2024, 05:30 AM IST
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (மார்ச் 04) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்பு கிடைக்கும்.
சமீபத்திய புகைப்படம்
ரிஷபம்
அரசு தொடர்பான காரியங்களில் பொறுமை அவசியம். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
மிதுனம்
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதளவில் தெளிவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.
கடகம்
அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீண்ட நாள் பிரச்னைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
சிம்மம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். துயரம் விலகும் நாள்.
கன்னி
உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரன இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் பிறக்கும்.
துலாம்
விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப தனவரவுகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் சிறு சிறு அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும்.
விருச்சிகம்
மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் குறையும். வெளியூரிலிருந்து சாதகமான செய்தி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஞாபக மறதி பிரச்னைகள் ஓரளவு குறையும்.
தனுசு
தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். தொலைதூர உறவினர்களின் சந்திப்பு உண்டாகும்.
மகரம்
அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் சார்ந்த பய வாய்ப்புகள் மேம்படும். உதவும்பொழுது சிந்தித்துச் செயல்படவும். வியாபார ரீதியான முயற்சிகள் கைகூடும்.
கும்பம்
நினைத்த காரியங்கள் நிறைவேறும். மனதை உறுத்திய சில பிரச்னைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
மீனம்
உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தந்தை வழி உறவுகளில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்