தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உலகின் மிகப்பழமையான முருகன் கோயில் எங்கே உள்ளது தெரியுமா? ஆழிப்பேரலையால் நிகழ்ந்த அதிசயம்…!

உலகின் மிகப்பழமையான முருகன் கோயில் எங்கே உள்ளது தெரியுமா? ஆழிப்பேரலையால் நிகழ்ந்த அதிசயம்…!

Kathiravan V HT Tamil

May 11, 2023, 06:10 AM IST

குறவைக்கூத்து ஆடும் புடைப்பு சிற்பங்கள் உள்ள சுடுமண் பலகையும் இங்கே கிடைத்துள்ளது. குறவை கூத்து போன்ற அம்சங்கள் இவ்விடம் முருகன் கோயில் இருந்ததற்கான ருத்திற்கு வலு சேர்பதாய் அமைகிறது.
குறவைக்கூத்து ஆடும் புடைப்பு சிற்பங்கள் உள்ள சுடுமண் பலகையும் இங்கே கிடைத்துள்ளது. குறவை கூத்து போன்ற அம்சங்கள் இவ்விடம் முருகன் கோயில் இருந்ததற்கான ருத்திற்கு வலு சேர்பதாய் அமைகிறது.

குறவைக்கூத்து ஆடும் புடைப்பு சிற்பங்கள் உள்ள சுடுமண் பலகையும் இங்கே கிடைத்துள்ளது. குறவை கூத்து போன்ற அம்சங்கள் இவ்விடம் முருகன் கோயில் இருந்ததற்கான ருத்திற்கு வலு சேர்பதாய் அமைகிறது.

’குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்ற பழமொழி தமிழ்நாட்டில் மலைகளின் மீது இருக்கும் முருகன் கோயில்களை நமது கண் முன் நிறுத்துகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடு தொடங்கி பல்வேறு முருகன் கோயில்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

சமீபத்திய புகைப்படம்

படுக்கையில் கொடூரமான நடக்கும் ராசிகள் இவங்கதானாம்.. வெறியோடு இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

May 17, 2024 05:52 PM

Uthiradam Nakshatram: ’சூரியனின் ஆசி பெற்றவர்கள்!’ உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 17, 2024 04:47 PM

சனி பொட்டு வைத்து பொங்கல் வைக்க போகிறார்.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. உங்க ராசி என்ன?

May 17, 2024 03:53 PM

Jackpot: ஆடம்பர வாழ்க்கை கொடுக்கும் சுக்கிரன்.. மே மாதத்தில் இருந்து ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகளுக்கு இவர்கள் தான்

May 17, 2024 03:34 PM

திருமண யோகம் கொடுக்கும் சூரியன்.. கொஞ்சம் பேசாம இருங்க.. பணம் கொட்டும் யோகம் வருது

May 17, 2024 10:18 AM

குரு கும்மி எடுக்கப் போகிறார்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. 3 ராசிகள் கவனம்.. நீங்க என்ன ராசி!

May 17, 2024 10:08 AM

இவற்றில் மிகப்பழமையான முருகன் கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா? கோயில்கள் வழிபாட்டுக்கு புகழ்பெற்ற தமிழ்நாட்டில் நமது முன்னோர்கள் தொடக்கத்தில் அவர்களது முன்னோர்கள் மற்றும் தலைவன் நினைவாக கல் நட்டு வணங்கி உள்ளனர் என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

பின்னர் அக்கல்லை மழை மற்றும் வெயிலில் இருந்து காக்க மரத்தால் கூரை வெய்தும், மண்ணை குழைத்து சுவர் எழுப்பியும் பின்னர் சுட்ட செங்கற்களை கொண்டும் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் அவையெல்லாம் காலமாற்றத்தாலும், வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களாலும் சேதமடையவே எக்காலத்திலும் அழியாது இயற்கை சீற்றங்களை எதிர்த்து ஈடுகொடுக்கும் வகையில் கற்கோயில்களை எழுப்பினான்.

மாமல்லபுரம் கடற்கரை கோயில்

தமிழ்நாட்டில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான் கற்கோயில்கள் அமைக்கப்பட்டதாக தொல்லியல் தரவுகள் கூறுகின்றன. அதற்கு முன்னர் செங்கற்கள் மூலமே கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. கால மாற்றத்தால் இந்த பழமை வாய்ந்த செங்கல் கோயில்களை காணமுடியாமல் போய்விட்டது.

ஆழிப்பேரலை

இந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் தமிழ்நாட்டை சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கிய போது மாமல்லபுரத்தை அடுத்த சாளுவன் குப்பம் எனும் சிற்றூரில் மண்ணில் புதைந்திருந்த பாறையில் இருந்த கல்வெட்டு மறைந்த பெரும் வரலாற்றை நமக்கு திரும்ப கொண்டு வந்தது.

2004 சுனாமி எனும் ஆழிப்பேரலை

முருகன் கோயில்

935ஆம் ஆண்டை சேர்ந்த இராஷ்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் அக்கல்வெட்டு அங்கிருந்த முருகன் கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்காக தங்கம் வழங்கியதை பற்றி கூறியது.

இந்த கல்வெட்டு செய்தியை வைத்து அவ்விடத்தில் பல்லவர் கால கோயில் இருக்கலாம் என்று அகழாய்வைத் இந்திய தொல்லியில் துறையினர் தொடங்கினர்.

முதலில் கிடைத்த காசுகள், மண்பாண்டத் துண்டுகள், உடைந்த சுடுமண் உருவத் துண்டுகள், பித்தளை விளக்கு முதலியவை நம்பிக்கை ஊட்டின. ஒன்பதாம்நூற்றாண்டைச் சார்ந்த கற்தளம், சிதைந்த விமானத்தின் கற்கள், பல கல்வெட்டுகளுடன் தூண்கள் என்று பல்லவர் காலக் கோயில் வெளிப்பட்டது.

சாளுவன்குப்பம் முருகன் கோயில்

அரசர்களின் கல்வெட்டுக்கள்

ஒரு தூணில் 858ஆம் ஆண்டு கல்வெட்டு மாமல்லபுரத்தை சேர்ந்த கிரார்பிரியன் என்பவர் 10 கழஞ்சு பொன்னை கோயிலுக்கு தானமாக கொடுத்து அதன் வட்டியில் இருந்து கார்த்திகை மாதத்தில் திருவிழா கொண்டாட ஊர்சபையாரை கேட்டுக்கொண்டதை குறிப்பிட்டது. மேலும் பல்லவ மன்னர்களான முதலாம் தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன், கம்பவர்மன், ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன், மூன்றாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.

இக்கல்வெட்டுக்கல் திருவீழ்ச்சில் என்று அப்போது அழைக்கப்பட்ட அந்த ஊரில் இருந்த முருகன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானத்தை பற்றி கூறுகின்றன என்பது அகழாய்வின் முடிவில் தெரிய வந்தது.

கோயில் அமைப்பு

இந்த அகழாய்வின் போதுதான் பல்லவர் கால கருங்கல் கோயில், பழமையான சங்ககால செங்கல் கட்டுமானத்தின் மேல் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் அடிப்பகுதியில் மூன்று அடுக்கு லேட்டரைட் எனப்படும் செங்புரைக் கற்களின் மேல் செங்கற்களால் கட்டப்பட்டு இருக்கின்றன.

இந்த பழமையான சங்ககால முருகன் கோயில் சுனாமியாலோ, புயலால் ஏற்பட்ட ஆழிப்பேரலைகளாலோ அழிந்து பின்னர் 6 - 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர்களால் புதிய கற்கோயில் கட்டப்பட்டதாக தொல்லியில் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கல்லால் ஆன வேல்

வேல் வழிபாடு

கோயிலின் முன்புறம் செங்கல் அடித்தளத்தின் மேல் கல்லால் ஆன 6 அடி உயர வேல் உள்ளது. கல்லால் ஆன வேலை வணங்கும் வழிபாடு குறித்த குறிப்புகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. ‘கலிகெழு கடவுள் கந்தம் கைவிட’ என்ற புறநானூறு பாடலில் கந்தம் என்பது கல்லால் ஆன வேல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இக்கோயில் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருப்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். திருக்கோயில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே அமைக்கும் வழக்கம் உள்ள நிலையில் சிற்ப சாஸ்திரம் எழுதப்படுவதற்கு முன்னரே இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற கருதுகோள் உள்ளது.

குறவைக்கூத்து

மேலும் குறவைக்கூத்து ஆடும் புடைப்பு சிற்பங்கள் உள்ள சுடுமண் பலகையும் இங்கே கிடைத்துள்ளது. குறவை கூத்து போன்ற அம்சங்கள் இவ்விடம் முருகன் கோயில் இருந்ததற்கான கருத்திற்கு வலு சேர்பதாய் அமைகிறது.

இதன் மூலம் மாமல்லபுரம் அடுத்த சாளுவன்குப்பத்தில் உள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமையான முருகன் கோயிலே உலகின் மிக பழமையான முருகன் கோயில் ஆகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி