கோடரியால் தாக்கப்பட்ட செங்கழுநீர் அம்மன்!
Aug 22, 2022, 05:38 PM IST
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் செங்கழுநீர் ஓடைக்குச் சென்று மீன்பிடிப்பதற்காக மீனவர் ஒருவர் வலை வீசியபோது கிடைத்த உருண்டையான மரக்கட்டையைப் பிளக்க முயன்ற போது கோடாரி பட்ட இடத்திலிருந்து ரத்தம் வந்துள்ளது.
சமீபத்திய புகைப்படம்
இதனை அடுத்து மரக்கட்டையைச் சந்தனம் குங்குமம் இட்டு பூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. அம்மன் கனவில் கூறியபடி திருவுருவை விக்கிரகமாகப் பிரதிஷ்டை செய்து, மரத்துண்டைப் பீடமாக அமைத்து அதற்கு செங்கழுநீர் அம்மன் என்ற நாமம் இட்டு வழங்கி வருகின்றனர்.
இது இன்று அளவிலும் புதுச்சேரியில் பிரசித்தி பெற்று சக்தி வாய்ந்த அருள்கொண்ட விளங்கும் தலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராபட்டினமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
ஐந்தாம் வெள்ளியன்று தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவான சுனாமியின் போது இக்கோயில் அருகில் அமைந்திருக்கும் கோயில் குளத்தில் நீர் பெருக்கெடுத்ததாகவும் சுனாமியால் ஏற்படவிருந்த உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதற்குச் செங்கழுநீர் அம்மன் அருளே காரணம் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
பௌர்ணமி தினத்தில் இங்கு வந்து தங்கி மனம் உருகி வேண்டுபவர்களுக்குக் கண் பார்வை குறைபாடுகள் நீங்குவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.