Saturday Temple: இந்திரன் பெற்ற சாபம்.. எல்லையை தொட்டவுடன் சாப விமோசனம்.. அருள் புரிந்த பாபநாசநாதர்
Sep 07, 2024, 06:00 AM IST
Saturday Temple: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பாபநாசம் நாதர் எனவும் தாயார் உலகம்மை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Saturday Temple: இந்தியாவில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. யார் இந்த சிவபெருமான் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர். சிவபெருமான் என புராணங்களில் கூறப்படுகின்றன.
சமீபத்திய புகைப்படம்
குறிப்பாக தமிழ்நாட்டில் தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வசனம் இங்கு விரும்பினாலும் கேட்க முடியும் ஏனென்றால் தமிழ் மக்களின் மூத்த கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். மனிதர்கள் உருவாவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்ட புராணங்கள் இங்கு நாம் கேட்டதுண்டு.
அந்த வகையில் மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. மண்ணுக்காக மன்னர்கள் பல போர்களை செய்து வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் பல்வேறு விதமான மிகப்பெரிய கோயில்களை கட்டிச் சென்றுள்ளனர்.
குறிப்பாக சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் மிகப்பெரிய கம்பீரமான கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர் திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் சிவபெருமானுக்கு வழிபாடுகள் என தங்களது பக்தியின் உச்சத்தை தொட்டுள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அசைக்க முடியாமல் அந்த கோயில்கள் வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன. சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கோயில்களை எப்படி கட்டியிருப்பார்கள் என்ற ஆச்சரியம் இன்று வரை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பாபநாசம் நாதர் எனவும் தாயார் உலகம்மை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த திருக்கோயில் நவகைலாயங்களில் முதல் தளமாக திகழ்ந்து வருகின்றது. இது சூரிய கிரகத்தின் தலமாக விளங்கி வருகின்றது. இது சூரிய கைலாயம் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தைப்பூச தினத்தன்று நந்தியின் கொம்புகளின் இடையே நின்று நடராஜர் நடனமாடும் காட்சியை அங்கு காணலாம்.
தல வரலாறு
கைலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி டேவிக்கும் திருமணம் நடைபெற்ற பொழுது அனைத்து லோகத்தில் இருந்து அனைவரும் வந்திருந்தனர். இதனால் வடக்கு பக்கம் தாழ்ந்து தெற்கு பக்கம் உயர்ந்தது. இதனால் பொதிகை மலை நோக்கி அகத்திய முனிவரை சிவபெருமான் அனுப்பி வைத்தார். திருமணத்தை காண முடியாத அகத்தியர் மிகவும் வருத்தப்பட்டு சிவபெருமானை வேண்டிக் கொண்டார்.
அதனால் சித்திரை மாத பிறப்பொன்று சிவபெருமான் அகத்தியருக்கு திருமண கோலத்தை காட்டினார். அதனை உணர்த்துவதற்காகவே தற்போது இருக்கக்கூடிய பாபநாசநாதர் திருக்கோயிலில் பின்புறம் இருக்கக்கூடிய பிரகாரத்தில் கல்யாணசுந்தரராக அம்பாளோடு ரிஷப வாகனத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.
அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்ராச்சாரியாரின் மகன் துவஸ்டாவை இந்திரன் குருவாக ஏற்றுக்கொண்டார். ஒரு சமயம் துவஸ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த இந்திரன் அவரை கொன்றுவிட்டார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றி கொண்டது. பூமியில் இருக்கக்கூடிய அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்தார். ஆனால் அவருக்கு பாவ விமோசனம் கிடைக்கவில்லை.
உடனே குரு பகவான் பாபநாசத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டால் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என கூறியுள்ளார். உடனே அந்த திருக்கோயில் நோக்கி இந்திரன் சென்றுள்ளார் அந்த எல்லையை தொட்டவுடன் இந்திரனின் பாவம் நீங்கி விட்டது. எல்லைக்குள் சென்ற உடனேயே அவருடைய பாவம் நீக்கப்பட்டதால் இந்த சிவபெருமானுக்கு பாபநாசநாதர் என பெயர் வைக்கப்பட்டது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.