Wednesday Temple: குளத்தில் கிடைத்த சிலைகள்.. அருள்பாலித்த அர்த்தநாரீஸ்வரர்.. உலகத்தை ஆளும் சிவபெருமான்
Oct 02, 2024, 06:00 AM IST
HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டத்தில் உள்ள எலும்பு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் எனவும் தாயார் திருபுரசுந்தரி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Wednesday Temple: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு என மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
சமீபத்திய புகைப்படம்
இந்தியாவில் திரும்பும் திசை எல்லாம் சிவ பெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன இவருக்கென்ன மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய பல பக்தர்களின் குலதெய்வம் திகழ்ந்து வருகின்றார்.
குறிப்பாக தெற்கு பகுதியில் ஆண்டு வந்த மன்னர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக ஒருபுறம் போரிட்டு வந்தாலும் மறுபுறம் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் தங்களது கலை சிற்பக் கலையில் வெளிப்படுத்துவதற்காகவே கோயில்களை கட்டினாலும் அதில் மூலவராக தனது குலதெய்வம் ஆன சிவபெருமானை வைத்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை வரலாற்றில் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டத்தில் உள்ள எலும்பு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் எனவும் தாயார் திருபுரசுந்தரி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
திருமண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டு விலகி இருக்கும் கணவன் மனைவி இந்த கோயிலில் வந்து வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் ஒற்றுமை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் பக்தர்களின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் அர்த்தநாரீஸ்வரர் தீர்த்து வைப்பார் என பக்தர்கள் கூறுகின்றனர். இந்த திருக்கோயிலில் கருவறைக்கு வெளியே விநாயகர் மற்றும் முருக பெருமான் இருவரும் இரு பக்கத்தில் அமைந்துள்ளனர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி துர்க்கை அம்மன் சண்டிகேஸ்வரர் அனைவரும் அருள் பாலிசி வருகின்றனர் இந்த திருக்கோயிலில் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் கருடாழ்வார் சன்னதிகளும் அமைந்துள்ளது.
தல வரலாறு
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் பெரியவர் ஒருவர் வசித்து வந்தார். அவர் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீர் வற்றி போனது. அவர் அதனை தூர் வாரும் வேளையில் இறங்கினார். அந்த சமயம் அந்த இடத்தில் இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. உடனே அந்த சிலைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு அருகில் இருக்கக்கூடிய கீற்று கொட்டகையில் வைக்கப்பட்டன.
அதனை தினம்தோறும் கழுவி விளக்கேற்றி வழிபட்டு வந்தார் அந்த பெரியவர். சில காலத்திற்குப் பிறகு அங்கு ஒரு கோயில் அமைத்துள்ளனர். நீண்ட காலமாக நீரிலேயே வசித்து வந்த காரணத்தினால் இந்த சிவபெருமான் ஜலகண்டேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் இவரை பூஜை செய்து வழிபட்டால் சிவபெருமான் மற்றும் பார்வதி இருவரையும் வேண்டிய பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இவர் அர்த்தனாரீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.
செல்கின்ற வழி
சென்னையில் இருக்கக்கூடிய பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாஜ் பிரகாஷ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஆராவமுதன் கார்டன் உள்ளது. அதன் முதல் தெருவில் இந்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.