Sunday Temple: நோயால் அவதிப்பட்ட மன்னன் மகன்.. தவமிருந்த பார்வதி தேவி.. நிவர்த்தி செய்த அர்த்தநாரீஸ்வரர்-tirunelveli district vasudevanallur arulmigu arthanareeswarar temple history can be known - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sunday Temple: நோயால் அவதிப்பட்ட மன்னன் மகன்.. தவமிருந்த பார்வதி தேவி.. நிவர்த்தி செய்த அர்த்தநாரீஸ்வரர்

Sunday Temple: நோயால் அவதிப்பட்ட மன்னன் மகன்.. தவமிருந்த பார்வதி தேவி.. நிவர்த்தி செய்த அர்த்தநாரீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 08, 2024 06:00 AM IST

Sunday Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் சிந்தாமணி நாதர் அர்த்தநாரீஸ்வரர் எனவும் தாயார் இடபாகவல்லி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றார்.

Sunday Temple: நோயால் அவதிப்பட்ட மன்னன் மகன்.. தவமிருந்த பார்வதி தேவி.. நிவர்த்தி செய்த அர்த்தநாரீஸ்வரர்
Sunday Temple: நோயால் அவதிப்பட்ட மன்னன் மகன்.. தவமிருந்த பார்வதி தேவி.. நிவர்த்தி செய்த அர்த்தநாரீஸ்வரர்

உயிரினங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே சிவபெருமான் தோன்றி பக்தர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். மனிதர்கள் உருவாவதற்கு முன்பே அனைத்து உயிரினங்களும் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த மன்னர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளன. அதே சமயம் காலத்தால் அழிக்க முடியாத மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். தங்களது கலை நயத்தையும், பக்தியையும் வெளிப்படுத்துவதற்காகவும் மிகப்பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் வந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் சிந்தாமணி நாதர் அர்த்தநாரீஸ்வரர் எனவும் தாயார் இடபாகவல்லி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றார்.

தல சிறப்பு

குறிப்பாக இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி கொடுத்து வருகிறார். கைகூப்பிய நிலையில் யோபு சண்டிகேஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். பல்வேறு விதமான சிக்கல்களால் பிரிந்து இருக்கக்கூடிய தம்பதிகள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் அவர்கள் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் புளிய மரங்கள் இந்த பகுதியில் நிறைந்து வனமாக காணப்பட்டது அந்த சிவபெருமான் காட்சி கொடுத்த காரணத்தினால் இவர் சிந்தாமணி நாதர் என அழைக்கப்பட்டு வருகிறார். புளிய மரத்திற்கு சிந்தை மரம் என்ற பெயரும் உள்ளது.

தல வரலாறு

பிருங்கி என்ற மகரிஷி சிவன் வேறு சக்தி வேறு என்று எண்ணத்தில் நினைத்து வைத்திருந்தார். அதன் காரணமாக சிவபெருமானை மட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபமடைந்த பார்வதி தேவி பலமுறை இதுகுறித்து அவருக்கு உணர்த்தும் படி சிவபெருமானிடம் கூறியுள்ளார்.

ஆனால் பார்வதி தேவியின் குரலுக்கு சிவபெருமான் செவி சாய்க்கவில்லை. இதன் காரணமாக பார்வதி தேவி சிவபெருமானில் இருந்து சென்றார். அதன் பின்னர் ஒரு புளிய மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இருந்தார். தவத்தில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் நேரில் காட்சி கொடுத்து பார்வதி தேவியை தன்னுள் ஏற்றுக்கொண்டார். அதனால் அந்த இடத்திலேயே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.

இதே பகுதியில் ரவிவர்மன் என்ற மன்னர் மிகப்பெரிய சிவபக்தனாக வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் குலசேகரனுக்கு மிகப்பெரிய நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். தனது மகனின் நோய் குணமடைய வேண்டுமென சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவரை சிவனடியார் ஒருவர் சந்தித்து இந்த தளத்து சிவபெருமானிடம் வழிபட்டால் உனது மகனின் நோய் நீங்கும் எனக் கூறியுள்ளார். அதன்படி மன்னர் தனது மகனை அழைத்து வந்து இங்கு வழிபட்டார். அதன் பின்னர் மன்னனின் மகனுக்கு நோய் நீங்கியது உடனே அர்த்தநாரீஸ்வரருக்கு மன்னர் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபட்டார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner