HT Yatra: தவமிருந்து அகத்தியர்.. காட்சி கொடுத்த அகத்தீஸ்வரர்.. பாண்டியர்கள் கால கோயில்..!
HT Yatra: பழங்காலத்தில் இருந்த மக்கள் சிவபெருமான் மீது அதிக பக்தியை கொண்டு வாழ்ந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் உள்ளாவூர் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்.
HT Yatra: உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடவுள்களுடன் ஒப்பிடுகையில் சிவபெருமான் தனித்துவமான கடவுளாக இருந்து வருகிறார் ஏனென்றால் உலகம் முழுவதும் இவருக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்தியாவில் இருக்கக்கூடியவர்களுக்கு சிவபெருமான் குலதெய்வமாக விளங்கி வருகின்றார்.
கடவுளுக்கு எல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார் அனைவருக்கும் ஆது கடவுளாக விளங்கி வரும் சிவபெருமானுக்கு இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் கோவில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன குறிப்பாக தமிழ்நாட்டில் உலகிலேயே இருக்கக்கூடிய மூத்த மொழியான தமிழ் மொழியின் ஆதி கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.
மன்னர்கள் காலம் போட்டு இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்தப்படுகிறது மண்ணுக்காக ஒரு புறத்தில் மன்னர்கள் போரிட்டு வந்தாலும் மறுபுறம் தங்களது சிவபெருமானின் பக்தியை வெளிப்படுத்துவதற்காக வேண்டி கலைநயம் மிக்க பிரம்மாண்ட கோயில்களை கட்டி சென்றுள்ளனர். இன்று வரை அந்த கோயில்கள் காலம் கடந்து கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டறியப்படவில்லை.
அந்த அளவிற்கு பழங்காலத்தில் இருந்த மக்கள் சிவபெருமான் மீது அதிக பக்தியை கொண்டு வாழ்ந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் உள்ளாவூர் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் அகத்தீஸ்வரர் என திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். உற்சவர் சந்திரசேகரர் பார்வதி தேவி. தாயார் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்தோடு அருள் பாலித்து வருகிறார். இந்த தளத்தின் தல விருட்சமாக சரங்கொண்றை மரம் விளங்கி வருகிறது. தீர்த்தம் தாமரை குளம் என அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் கோயில்களில் நடத்தப்படும் அனைத்து வழிபாடுகளும் இந்த கோயில்களிலும் நடத்தப்படுகிறது. அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாக இந்த திருத்தலம் விளங்கி வருகிறது. இந்த கோயில் பாண்டிய மன்னர்களால் அவர்கள் காலத்தில் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.
தல வரலாறு
இந்த கோயில் பாண்டியர் மன்னர்களால் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. பல்லவர்களை போரில் வெற்றி பெற்ற பாண்டியர்கள் தங்களது வெற்றியை குறிக்கும் வகையில் அங்கு இருக்கக்கூடிய கோயில்களின் தங்களது மீன் சின்னங்களை பொருத்திச் செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய சிவபெருமான் கோயில்களில் இதுபோன்ற மீன் சின்னங்கள் பொறுத்திருப்பதை நம்மால் காண முடியும். போரில் தாம் கண்ட வெற்றியை குறிப்பதற்காகவே இந்த மீன் சின்னங்களை பாண்டியர்கள் பொறுத்துச் சென்றுள்ளனர்.
அதே போல இந்த கோயிலிலும் இந்த மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் திருவடிபட்ட பூமி என்கின்ற காரணத்தினால் பல்வேறு கால நிலைகளும் இன்று தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் வறட்சி இல்லாமல் நிலங்களில் விவசாயம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அகத்தியர் இறைவனின் நேரில் தரிசனம் செய்வதற்காக இங்கு அமர்ந்து தவம் செய்துள்ளார். அதன் காரணமாக தவத்தின் பெருமையால் சிவபெருமான் நேரில் காட்சி அளித்துள்ளார். அதனால் இங்கு இருக்கக்கூடிய சிவபெருமான் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்