Sani Palangal: சனி சாவடி உறுதி.. பணத்தோடு விளையாட்டு.. இனி இந்த ராசிகள்.. தொட்டுப் பார்க்காதீங்க
Sep 30, 2024, 11:13 AM IST
Lord Saturn: சனி பகவானின் சதய நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.
Lord Saturn: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து கர்ம வினைகளாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சமீபத்திய புகைப்படம்
நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விலகி வருகின்றார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ரசிகர்கள் பயணம் செய்வார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனிபகவான் வருகின்ற அக்டோபர் மூன்றாம் தேதி அன்று ராகு பகவானின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் நுழைகின்றார். இதனால் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் சனி பகவானின் சதய நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.
கும்ப ராசி
சனி பகவானின் சதய நட்சத்திர பயணம் உங்களுக்கு யோகத்தைப் பெற்றுத் தரும். உங்கள் ராசியில் முதல் வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் சனி பகவான் பல்வேறு விதமான நன்மைகளை கொடுப்பார். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு வரவே திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். நண்பர்களால் உள்ளது கிடைக்கும்.
ரிஷப ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும். பல்வேறு விதமான சூழ்நிலைகளிலிருந்து உங்களுக்கு நல்ல விடுதலை கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
அனைத்தும் துறைகளிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை வெற்றி தரும் புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத்தரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும்.
மிதுன ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வணிகத்தில் உங்களுக்கு புதிய முன்னேற்றம் கிடைக்கப்படும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.