குரு தலையில் அடிப்பார்.. கதற கதற ஓடப்போகும் ராசிகள்.. பிச்சு பிச்சு தூக்கி எறிவார்!
Oct 31, 2024, 07:37 AM IST
குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டங்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
குருபகவான் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமீபத்திய புகைப்படம்
குரு பகவான் தேவர்கள் குருவாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டங்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
குருபகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிர பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட உடமைகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நீதித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பெரிய முதலீடுகள் செய்யும்போது நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். நண்பர்களால் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கடக ராசி
குரு பகவானின் வக்கிர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. ஆன்மீகப் பயணத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அவிழ்ப்பது நஷ்டங்கள் ஏற்படக்கூடும். தொழிலில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளியூர் பயணம் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சக ஊழியர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படக்கூடும். அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். குடும்ப வாழ்க்கையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை மிகவும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
மகர ராசி
குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் வக்கிரம் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேச்சில் தடுமாற்றம் இருக்கக்கூடும். சக ஊழியர்களோடு மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மோசமான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாக வாய்ப்பு உள்ளது. அனைத்து தருணங்களும் உங்களுக்கு தவறாக அமைய வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வணிகத்தில் ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது அதிக கவனம் செலுத்துதல் வேண்டும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும். தருணம் இது குடும்பத்தினரிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.