குருத்வராவின் பிரசாதம் உங்கள் வீட்டில் இந்த தீபாவளிக்கு; இப்படி ஒரு ஸ்வீட் சாப்பிட்டு இருக்கவே முடியாது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குருத்வராவின் பிரசாதம் உங்கள் வீட்டில் இந்த தீபாவளிக்கு; இப்படி ஒரு ஸ்வீட் சாப்பிட்டு இருக்கவே முடியாது!

குருத்வராவின் பிரசாதம் உங்கள் வீட்டில் இந்த தீபாவளிக்கு; இப்படி ஒரு ஸ்வீட் சாப்பிட்டு இருக்கவே முடியாது!

Priyadarshini R HT Tamil
Oct 29, 2024 07:13 PM IST

குருத்வராவின் பிரசாதம் உங்கள் வீட்டில் இந்த தீபாவளிக்கு கட்டாயம் செய்து பாருங்கள். இப்படி ஒரு ஸ்வீட் சாப்பிட்டு இருக்கவே முடியாது எனுமளவுக்கு சுவை நிறைந்ததாக இருக்கும்.

குருத்வராவின் பிரசாதம் உங்கள் வீட்டில் இந்த தீபாவளிக்கு; இப்படி ஒரு ஸ்வீட் சாப்பிட்டு இருக்கவே முடியாது!
குருத்வராவின் பிரசாதம் உங்கள் வீட்டில் இந்த தீபாவளிக்கு; இப்படி ஒரு ஸ்வீட் சாப்பிட்டு இருக்கவே முடியாது!

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – அரை கப்

சர்க்கரை – அரை கப்

நெய் – அரை கப்

முந்திரி – கால் கப்

ஏலக்காய்ப்பொடி – ஒரு சிட்டிகை

செய்முறை

கோதுமை அல்வா குருத்வாரவில் இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம். இதற்கு மூன்றே மூன்று பொருள் போதுமானது. நட்ஸ் மற்றும் ஏலக்காய்ப்பொடி தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விடலாம்.

ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.

முந்திரி வறுத்த அதே கடாயில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து சூடாக்கி, கோதுமையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

குறைவான தீயில் நன்றாக தொடர்ந்து வறுத்துக்கொள்ள வேண்டும். நெய்யுடன் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வரும்.

நன்றாக அதை கிளறவேண்டும். நன்றாக கொதித்த தண்ணீரை இந்த வறுத்துக்கொண்டிருக்கும் கோதுமை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறினால், அல்வா பாதத்துக்கு வரும்.

அப்போது சர்க்கரையை சேர்த்து நல்ல அல்வா பதம் வரும்வரை கிளறவேண்டும். நெய் பிரிந்து வரும் தருணத்தில் வறுத்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்த இறக்கினால் கடா பிரசாத் ரெடி. இந்த தீபாவளியன்று வீட்டில் சாமிக்கு படையல் செய்ய கடா பிரசாத்தை முயற்சி செய்து பாருங்கள்.

நெய்யை குறைவாக சேர்த்தால் ஆரோக்கியம் கிடைக்கும். அனைவரும் சாப்பிடலாம். நெய்யை அதிகம் சேர்த்தால், சுவை நன்றாக இருக்கும். பாரம்பரிய கடா பிரசாத் செய்ய சர்க்கரை, கோதுமை மாவு, நெய் மூன்றும் ஒரே அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் மாவு என்றால் அனைத்தும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நட்ஸ்கள் சேர்ப்பது உங்களின் தேவைக்கு ஏற்ப செய்துகொள்ளலாம். தேவைப்பட்டால் பாதாம், உலர் திராட்சைகள் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

சுவை நன்றாக இருக்க வேண்டுமெனில் அனைத்து பொருட்களும் தரமானதாக இருக்க வேண்டும்.

கோதுமையை குறைவாக தீயில் வைத்து நன்றாக தொடர்ந்து கிளறி வறுக்க வேண்டும். நல்ல பொன்னிறமாகி, மணம் வரும் வரை வறுக்கவேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

தண்ணீர் சேர்க்கும்போது கட்டிப்படாமல் கிளறவேண்டும். புதிதாக முயற்சி செய்தால் தண்ணீர் சேர்க்கும்போது விஸ்க் வைத்துக்கொள்ளுங்கள். சட்டுன்னு தயாராகிவிடும் கடா பிரசாத். வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஒரு நாள் வெளியில் வைத்து சாப்பிடலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்துக்கொள்ளலாம். ஆனால் சாப்பிடும்போது சூடாக்கிக்கொள்ள வேண்டும். குருத்துவாராவின் பிரசாதம். இதில் பால் சேர்க்கக்கூடாது.

இதை கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் கர்கலா கேக் என்று அழைக்கிறார்கள். வட இந்தியாவில், கோதுமை அல்வா, பொற்கோயில் பிரசாதம், கடா பிரசாத் என பல வகைகளில் அழைக்கிறார்கள்.

கர்கலா என்பது கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம். இந்த இனிப்பு பண்டிகை காலங்கள், விழாக்களின்போது செய்யப்படுகிறது. குருத்துவாரில் இதை செய்யும்போது பக்தி பாடல்கள், மந்திரகள் பாடிக்கொண்டே செய்கிறார். அப்போதுதான் இந்த பிரசாத்தில் கடவுளின் அருள் நிறையும் என்று எண்ணுகிறார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.