தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பழத்தால் அகந்தையை போக்கிய முருகன்.. பாதம் பணிந்த ஔவையார்!

HT Yatra: பழத்தால் அகந்தையை போக்கிய முருகன்.. பாதம் பணிந்த ஔவையார்!

Feb 08, 2024, 06:20 AM IST

google News
பழமுதிர்சோலை முருகன் கோயிலின் வரலாறு குறித்து இங்கு காண்போம்.
பழமுதிர்சோலை முருகன் கோயிலின் வரலாறு குறித்து இங்கு காண்போம்.

பழமுதிர்சோலை முருகன் கோயிலின் வரலாறு குறித்து இங்கு காண்போம்.

உலகமெங்கும் பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடிய முருக பெருமான். அறுபடை வீடு கொண்டு தமிழ்நாட்டில் பக்தர்களுக்கு தலைவனாக திகழ்ந்து வருகிறார். கோயில் நகரமாக மதுரை மாநகரத்தில் பிரபல கோயிலாக திகழக்கூடிய அழகர் மலையில் அமைந்துள்ளது முருகனின் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை.

சமீபத்திய புகைப்படம்

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

சனியன்று எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்க ஜாதகத்தில் சனி தோஷங்கள் நீங்கும் தெரியுமா!

Dec 21, 2024 01:36 PM

டிசம்பர் 22 முதல் 28 வரை 12 ராசிக்கும் எப்படி இருக்க போகிறது? யார் எச்சரிக்கையாக இருக்கணும்.. இதோ பாருங்க!

Dec 21, 2024 12:49 PM

இந்த மூன்று ராசிக்கு சிக்கல் மேல் சிக்கல் தான்.. ராகு பெயர்ச்சி இவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும்!

Dec 21, 2024 11:02 AM

119 நாட்கள் குரு கொட்டிக் கொடுக்கப் போகிறார்.. இந்த ராசிகள் கோடிகளில் மிதப்பார்கள்.. சாமானியத்தில் மாறாது..!

Dec 21, 2024 10:33 AM

ராகு 2025 ஏழரை .. கும்பத்தில் புகுந்து .. அடிக்கு மேல் அடி விழும் 3 ராசிகள்.. கஷ்டத்தில் கதறுவது யார்?

Dec 21, 2024 10:27 AM

அகந்தையை அளிக்கக்கூடிய திருத்தலமாக இந்த கோயில் விளங்கி வருகிறது. ஒளவையார் பாடம் சொல்லி முருக பெருமான் திருவிளையாடல் ஆடிய இடம் தான் இந்த பழமுதிர்ச்சோலை திருத்தலம்.

தல வரலாறு

 

தமிழ் புலமையில் புகழும் உச்சிக்கு சென்றவர் ஒளவையார். ஒரு முறை அவருக்கு தான் என்று அகங்காரம் ஏற்பட்டு விட்டது. இதனை கண்டறிந்த முருக பெருமான் அவரை அகந்தையை அகற்ற வேண்டும் என எண்ணினார். மதுரையில் காட்டு வழியாக ஒரு முறை ஒளவையார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்தார் முருக பெருமான்.

அருகில் இருந்த ஒரு நாவல் மரத்தின் மீது ஏறி முருகப்பெருமான் அமர்ந்து கொண்டார். தொலைதூரம் நடந்து வந்த ஒளவையார் அசதியின் காரணமாக அந்த மரத்து அடியில் அமர்ந்தார். மிகுந்த பசியோடு ஒளவையார் மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்தார்.

மரத்தை மேலே பார்த்த ஒளவையார், அதில் ஒரு சிறுவன் அமர்ந்திருப்பதை கண்டார். மரத்தில் அதிக நாவல் பழங்கள் இருந்தன. இதனைக் கண்ட ஒளவையார், மரத்தில் இருக்கக்கூடிய சிறுவனே, எனக்கு மிகவும் பசியாக இருக்கின்றது மரத்தில் இருக்கக்கூடிய நாவல் பழங்களை எனக்கு பறித்துக் கொடுக்கின்றாயா? எனக் கேட்டுள்ளார்.

உடனே சிறுவனாக இருக்கக்கூடிய முருகப்பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என அவரிடம் கேட்டுள்ளார். கேள்வி புரியாத ஒளவையார், பழங்களில் கூட சுட்ட பழம், சுடாத பழம் என்று ஒன்று இருக்கின்றதா என கேட்டுள்ளார். உடனே சிரித்துக் கொண்டே சுடாத பழங்களை கொடு என ஒளவையார் சிறுவனான முருகப்பெருமானிடம் கேட்டுள்ளார்.

மேலே ஏறி முருகப்பெருமான் மரத்தை உலுக்கி விட்டார். பழங்கள் அனைத்தும் தரையில் விழுந்தன. கீழே இருந்த ஒளவையார் பழங்களில் எடுத்துக் கொண்டார். தரையில் இருந்த மண் பழங்களில் ஒட்டி இருந்தன. அதனை சுத்தம் செய்வதற்காக பழங்களை ஊதினார் ஒளவையார்.

உடனே சிறுவனாக இருந்த முருக பெருமான் என்ன பழம் சுடுகின்றதா? என கேட்டுள்ளார். அந்த ஒரு கேள்வியில் ஒளவையார் அகங்காரம் அழிந்துவிட்டது. உடனே இந்த அளவிற்கு அறிவுக்கூர்மையாய் பேசும் மானுடன் கண்டிப்பாக மானிடப் பிறவியாக இருக்க முடியாது என ஒளவையார் அறிந்து உணர்ந்தார்.

உடனே சிறுவா நீ யாரப்பா? என கேட்டார். உடனே சிறுவனாக இருந்த முருக பெருமான், தனது சுய உருவத்தை காண்பித்தார். உடனே தெரிவித்து போன ஒளவையார், முருகப்பெருமானை வழிபட்டு சரணம் அடைந்தார்.

முருகன் அமர்ந்திருந்து அவளிடம் உரையாடிய அந்த மரம் இன்றும் சோலை மலையில் முருகன் கோயிலில் இருக்கின்றது. உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்கள் அனைத்தின் மீதும் பற்று என்ற மணல் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. அதனை போக்குவதற்கு கல்வி அறிவு மட்டுமே பத்தாது விஞ்ஞானமும் தேவை. தான் என்று அகந்தையை மனதில் இருந்து அகற்றி விட்டால் இறைவனை எளிதில் உணரலாம் என்பதே முருகப்பெருமான் உணர்த்திய தத்துவமாகும்.

இந்த கோயிலில் தம்பதி சமேதராக முருக பெருமான் காட்சி கொடுக்கின்றார். ஒவ்வொரு காயும் கனியாவதற்கு ஒரு சில சீதோஷ்ண நிலையை பொறுத்து தனித்தனி மாதங்களில் பலமாகும் நாவல் பழம் எப்போதும் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் பலமாக கிடைக்கும்.

ஆனால் இந்த கோயிலில் இருக்கக்கூடிய நாவல் மரத்தில் சஷ்டி மாதமாக விளங்கக்கூடிய ஐப்பசி மாதத்தில் நாவல் பழங்கள் பழுக்கும் அதிசயம் நடந்து வருகிறது. இந்த கோயில் 2000 ஆண்டுகள் பழமையான கோயில் எனக் கூறப்படுகிறது.

தல சிறப்புகள்

 

இந்த தளத்தில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கல்வி செல்வம், மனத்தூய்மை உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வழித்தடம்

 

இந்த கோயில் மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தொடர்ச்சியான பேருந்து வசதிகள் இந்த கோயிலுக்கு உள்ளன மழையின் அடிவாரத்தில் உலகம் போற்றும் அழகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்காக அனைத்து வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி