Worship: அம்மன் வழிபாட்டில் இத்தனை பலன்களா.. அப்படி என்ன ஸ்பெஷல்?
Jul 11, 2023, 05:34 PM IST
அம்மன் விரத வழிபாடும் அதன் பலன்களும் குறித்து இங்கே காண்போம்.
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் பல்வேறு விதமான விசேஷ நலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அப்படி அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்குக் காணலாம்.
சமீபத்திய புகைப்படம்
மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மனை விரதமிருந்து வழிபாடு செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் திருமணத்தடை, வேலை தடை உள்ளிட்ட அனைத்து விதமான தடைகளும் விலகும் என நம்பப்படுகிறது.
காஞ்சி காமாட்சி அம்மன்
காமாட்சி அம்மனை விரதமிருந்து வழிபாடு செய்தால் தீராத துன்பங்கள் அனைத்தும் விரைவில் தீரும் எனக் கூறப்படுகிறது. கஷ்டங்களை போக்கக்கூடிய தெய்வங்களில் இவரும் ஒருவர்.
இருக்கன்குடி மாரியம்மன்
இந்த அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் உடலில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், கை, கால், வயிறு, கண் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் வழிபாட்டின் மூலம் விலகும் எனக் கூறப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன்
அமாவாசை, பௌர்ணமி விரதம் இருந்து சமயபுரம் மாரியம்மன் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என கூறப்படுகிறது. கோயிலில் இருக்கக்கூடிய புனித நீரில் நீராடி அம்மனை வழிபாடு செய்தால் வெற்றிகள் குவியும் என கூறப்படுகிறது.
வெக்காளி அம்மன்
இந்த அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை வரும் என கூறப்படுகிறது. பிள்ளை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளம். நினைத்த வேண்டுதலை மனதார அவனிடம் கூறினால் வேண்டுதல் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
வாராஹி அம்மன் விரதம்
பஞ்சமி திதி தினத்தில் இந்த வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்ததாகும். அன்றைய தினம் விரலி மஞ்சள் மாலை அணிவித்து அம்மனை வழிபட்டால் திருமணத் தடை விலகும் எனக் கூறப்படுகிறது. வராகி அம்மனை நினைத்து 16 முறை பிரதட்சணம் செய்தால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த அம்மன் மட்டுமில்லாது அருகில் இருக்கக்கூடிய அம்மன் கோயில்களுக்குச் சென்று பக்தர்கள் வழிபாடு செய்தால் உங்களுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. சிவன் கோயில்களில் சுற்றுப் பிரகாரத்தில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத சிக்கல்கள் தீரும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்