தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அஸ்தமனத்தில் அதிரடி காட்டும் புதன்.. அடாவடியாக வாழப் போகும் ராசிகள்.. இனி உங்கள் மீது அதிரடிதான்

அஸ்தமனத்தில் அதிரடி காட்டும் புதன்.. அடாவடியாக வாழப் போகும் ராசிகள்.. இனி உங்கள் மீது அதிரடிதான்

Nov 26, 2024, 05:41 PM IST

google News
Mercury: புதன் பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும், இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Mercury: புதன் பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும், இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Mercury: புதன் பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும், இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். ஒரு மாதம் கூட முழுதாக பயணிக்காத ராசியாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இருப்பினும் இவர்களுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்? நவம்பர் 27ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 26, 2024 09:16 PM

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 26, 2024 03:20 PM

புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது புதன் பகவான் விருச்சிக ராசியில் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவம்பர் 30ம் தேதி அன்று புதன் பகவான் விருச்சிக ராசியில் அஸ்தமனமாக உள்ளார். புதன் பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும், இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். சிறிய வேலைகள் இருப்பவர்களுக்கு பெரிய வருமானம் கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். டிசம்பர் மாதம் தொடங்கிய பிறகு உங்களுக்கு யோகம் கிடைக்க கூடும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகர ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆக உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தலைமை பண்புகள் உங்களுக்கு அதிகரிக்கும்m வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் சிறந்த முறையில் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நிறைய லாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பங்குச்சந்தை முதலீடு நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்த கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். 

பெற்றோர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி