விருச்சிகத்தில் புதன் பகவானின் பிற்போக்கு நகர்வு.. தொழில் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்?
- விருச்சிகத்தில் புதன் பகவானின் பிற்போக்கு நகர்வு.. தொழில் மற்றும் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்?
நவம்பர் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை விருச்சிக ராசியில் புதன் பகவான் பிற்போக்குத் தனமாக நகர்கிறார். இந்த ஜோதிட நிகழ்வு மக்களின் வாழ்க்கையில் ஒரு சிறப்பு ஆற்றலைக் கொண்டுவருகிறது.
முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இருமுறை சிந்திக்க வைக்கும். பலர் புதன் பகவானின் பிற்போக்கு குழப்பம் மற்றும் முழுமையான கோளாறின் நேரமாக உணர்கிறார்கள். ஆனால் இந்த காலம் சுய வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
புதன் பகவானின் பிற்போக்கு இயக்கம் என்பது புதன் வானத்தில் எதிர் திசையில் நகர்வதைக் குறிப்பதாகும். இந்த தருணத்தில் உத்திகளை செயல்படுத்துவதற்கு முன்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
விருச்சிக ராசி என்பது நீர் ராசி எனப்படுகிறது. மேலும் எட்டாவது ராசியாகும். விருச்சிக ராசியினரிடையே ஆர்வம் மற்றும் மர்மம், உணர்ச்சியின் ஆழம், தனிப்பட்ட வலிமை, பணம் போன்றவை அதிகமாகவே காணப்படும்.
விருச்சிகத்தில் புதனின் இந்த குறிப்பிட்ட பிற்போக்கு மேலும் சொன்னவற்றை தீவிரப்படுத்தி, நமது அச்சங்கள், கோபத்தை எதிர்கொள்ள நம்மை கட்டாயப்படுத்தும்.
உங்களைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் கனவுகளில் கூட விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்.
இந்த பிற்போக்கு உறவுகளை ஒளிரச்செய்ய உதவும். விருச்சிக ராசி ஆற்றல் மோதல்களைத் தீர்க்கவும். புதிய, ஆரோக்கியமான இணைப்புகளை உருவாக்க உதவும். இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியம். விவாதங்களை சிறப்பாக நிர்வகித்தால், வெளிச்சத்தையும் தீர்வையும் கொண்டு வர முடியும்.
தொழில் தாக்கம்:
புதன் என்பது தகவல்தொடர்புக்கான கிரகம். அது பின்னோக்கிச் செல்லும்போது, நம் மீது கெட்ட அபிப்பிராயத்தை உண்டுசெய்யும். குழு உறுப்பினர்களிடையே குழப்பம், பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகளில் தவறான தகவல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை மெதுவாக பரப்புதல் ஆகியவை இதனால் நிகழலாம். விருச்சிக ராசியில் இதன் செயல்பாடு அதிகரிக்கக்கூடும். இதனால் குழு சூழ்நிலைகளில் பணியாற்றுகையில் கோபம் ஏற்படலாம்.
இந்த நேரத்தில் தெளிவான மற்றும் நீண்ட கால உத்திகளில் கவனம் செலுத்துங்கள். அனைத்து ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் வேலை தொடர்பான அறிக்கைகளை அனுப்புவதற்கு முன்பு மதிப்பாய்வு செய்யவும். சில சக ஊழியர்கள் அல்லது மேற்பார்வையாளர்களுக்கு எதிர்வினையாற்றுவதில் ஒருவரிடமும் அவசரப்படக்கூடாது.
பணியிடத்தில் மோதல்களைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த வழி கண்ணியமான மற்றும் தொழில்முறை மொழியாகும்.
புதிய திட்டங்களைத் தொடங்க இது சிறந்த நேரம் அல்ல, ஆனால் நடந்துகொண்டவற்றை மறுபரிசீலனை செய்வதற்கு இது சரியான நேரம். ஒரு விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்வதன் மூலம் செயலூக்கத்தைப் பெறலாம். பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் அவர்கள் முன்பு முடித்த பணிகளுக்குத் திரும்பலாம். அவர்களின் திட்டங்களில் தவறவிட்ட அம்சங்களை சரிசெய்யலாம்.
உதாரணமாக, முந்தைய பிழைகளை சரிசெய்ய அல்லது வெவ்வேறு நடைமுறைகளை மேம்படுத்த இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் திட்டங்களை மதிப்பிடுவதற்கும், இல்வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்புகளை சரிசெய்ய சுயமதிப்பீடு செய்யவும் இது நல்ல நேரம் ஆகும்.
பணப்புழக்கம்:
புதனின் பிற்போக்கு பெரும்பாலும் ஒருவரின் நிதித் திட்டங்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விருச்சிக ராசியினரின் ஆற்றல் உங்கள் செலவு முறைகளைப் பற்றி மேலும் அறியவும் ஆராயவும் உங்களைத் தூண்டுகிறது. உங்கள் நிதி உத்திகளை மதிப்பாய்வு செய்வதற்கும், நீங்க எங்கு அதிகமாக செலவழிக்கிறீர்கள் என்பதைக் கண்டறியவும் இதுவே சரியான நேரம்.
இருப்பினும், இந்த நேரத்தில் எந்த முக்கியமான நிதி பரிவர்த்தனைகளிலும் ஈடுபட வேண்டாம். ஒரு நபர் பெரிய அளவில் கடன் வாங்கினாலும், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தாலும், பிரச்னைகள் ஏற்படலாம். அவை வேண்டாம் என்று ஒருவர் விரும்பலாம் அல்லது நிதி ரீதியாக அந்த நபருக்கு அழுத்தம் கொடுக்கலாம். இருப்பினும், பட்ஜெட்டில் வேலை செய்வது, கடன்களை அடைப்பது மற்றும் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தொடர்ச்சியான முதலீடுகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான நேரம் இது. அதிக ஆபத்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனெனில் பிற்போக்கு காலம் அபாயங்களை அதிகரிக்கக்கூடும்.
காதல் மற்றும் உறவுகள் மீதான தாக்கம்:
விருச்சிகத்தில் புதனின் பிற்போக்குத்தனமான நகர்வு என்பது,
ரிலேஷன்ஷிப்பில் நமது கோபம் எவ்வளவு பெரிய பிரச்னைகளை உண்டு செய்திருக்கிறது என்பதனை மறுபரிசீலனை செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.
சிலருக்கு, திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்க நினைப்பு வந்தால், ஜோதிடம் வேண்டாம் என்று சொல்கிறது. கடந்தகால தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதற்குப் பதிலாக அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள இது சரியான நேரம்.
ஒரு உறுதியான உறவில் உள்ளவர்கள் நம்பிக்கை, இலக்குகள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்கள் மற்றும் அதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கலாம். இந்த விவாதங்கள் சங்கடமாக இருக்கலாம். ஆனால், உறவின் திடமான அடித்தளத்தை உருவாக்க ஒரு வாய்ப்பாகும்.
எதிர்மறை பக்கத்தில், விருச்சிக ராசியினரின் கோபம் மற்றும் பழிவாங்கும் குணம் ஒருவித பாதுகாப்பின்மை அல்லது பயத்தை அதிகரிக்கவே செய்யும். இந்த கட்டத்தில், சிறந்த உத்தி யார் என்ன சொன்னாலும் கவனமாகக் கேட்பது மற்றும் எந்த அனுமானங்களையும் இவர் இப்படி தான் என்ற முன்முடிவுகளை செய்யாமல் இருப்பது. இரக்கமுள்ள மற்றும் சுருக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது வாதங்களை கற்றல் அனுபவங்களாக மாற்றும்.
சிங்கிளாக இருக்கும் விருச்சிக ராசியினருக்கு புதனின் பிற்போக்கு அவர்களின் துணை என்ன விரும்புகிறார்கள் என்பதை புரியவைக்கும். புதிய காதல் வாய்ப்புகள் வரக்கூடும், ஆனால் ஜாக்கிரதையாக இருங்கள், ஏனென்றால் இக்காலத்தில் காதல் வயப்பட்டால் மிகப்பெரிய வில்லங்கங்களைச் சந்திக்க நேரிடும்.
----------------------
(நீரஜ் தங்கர் - வேத ஜோதிடர், நிறுவனர் - ஆஸ்ட்ரோ ஜிந்தகி, நொய்டா)
தொடர்பு : +919910094779 (வாட்ஸ்அப் மட்டும்)
டாபிக்ஸ்