தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கட்டம் கட்டி தூக்கிய குரு.. 2025-ல் மிதுன ராசி.. குடும்பத்தில் பணம் கொட்டும்.. மகிழ்ச்சி தேடி வரும்.. ஆனந்தம் பொங்கும்..

கட்டம் கட்டி தூக்கிய குரு.. 2025-ல் மிதுன ராசி.. குடும்பத்தில் பணம் கொட்டும்.. மகிழ்ச்சி தேடி வரும்.. ஆனந்தம் பொங்கும்..

Dec 12, 2024, 09:52 AM IST

google News
Lord Guru: குருபகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். 2025 ஆம் ஆண்டு குருபகவான் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Guru: குருபகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். 2025 ஆம் ஆண்டு குருபகவான் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Guru: குருபகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். 2025 ஆம் ஆண்டு குருபகவான் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Guru: நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

மாடி வீடு கட்டிக்கொடுக்கும் சனி.. 2025ஆம் ஆண்டு பணத்தை வாரிக் கொள்ளும் 3 ராசிகள்.. ஜாலி ஆட்டம்

Dec 18, 2024 05:58 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.19 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 18, 2024 03:09 PM

குரு சும்மா விடமாட்டார்.. இந்த 3 ராசிகள் கதி என்ன?.. வந்து பாருங்க அதிர்ஷ்டமா?.. கஷ்டமா?

Dec 18, 2024 02:56 PM

சனி 2025 சரமாரியாக அடிப்பார்.. நேரடி பயணத்தில் சிக்கிய ராசிகள்.. தாறுமாறாக அதிர்ஷ்டம் வரும்

Dec 18, 2024 02:49 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.19 எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும்? - ராசிபலன்!

Dec 18, 2024 02:45 PM

மேஷம் முதல் கன்னி வரை.. உங்க ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் எந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெரியுமா?

Dec 18, 2024 12:52 PM

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் குரு பகவானின் இடமாற்றம் நிகழப் போகின்றது. ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். 2025 ஆம் ஆண்டு குருபகவான் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குருபகவானின் மிதுன ராசி இடமாற்றம் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நிகழவுள்ளது இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

நண்பர்களால் உதவி கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் தொழில் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுன ராசி

குருபகவான் உங்கள் ராசியில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் சொந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். 

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

குருபகவான் வரும் 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். பணவரவு எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி