சனி இருக்க பயமேன்.. யாரும் பிடித்து அசைக்க முடியாது.. இந்த ராசிகள் வாழ்க்கை அமோகம்.. நீங்க என்ன ராசி?
Nov 30, 2024, 12:51 PM IST
Lord Sani: சனி பகவானின் வக்ர நிவர்த்தி பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Sani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சமீபத்திய புகைப்படம்
அந்த வகையில் சனி பகவான் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு சனிபகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.
சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். சனி பகவானின் வக்ர நிவர்த்தி பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனிபகவான் நேரடி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
ரிஷப ராசி
சனி பகவானின் நேரான பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவில் இருந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் சரியான முன்னேற்றம் இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் சனிபகவான் நேரான பயணத்தை மகிழ்ச்சியோடு செய்து கொண்டு வருகிறார். உங்கள் ராசியில் 11 வது வீட்டில் இந்த சம்பவம் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சக ஊழியர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்களோடு உங்களுக்கு இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பழைய நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.