கடக ராசி புத்தாண்டு 2025 ராசிபலன்: சொர்க்கவாசல் திறந்து விட்டது.. இந்த வருடம் உங்களுக்கு அமோகமான ஆண்டு!
Dec 07, 2024, 10:01 AM IST
New Year 2025: கடக ராசிக்காரர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு மிகவும் நல்ல ஆண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2025 புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
New Year 2025: புத்தாண்டை கொண்டாடுவதற்காக காத்திருக்கக் கூடியவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றார்கள். புத்தாண்டை எதிர்நோக்குபவர்கள் இந்த ஆண்டு ஏதேனும் நமக்கு நல்லது நடக்குமா? என இருப்பவர்கள் தான் அதிகம். யாராக இருந்தாலும் புத்தாண்டை சிறப்பான ஆண்டாக கருதியை எதிர்நோக்கி காத்திருப்பார்கள்.
சமீபத்திய புகைப்படம்
இந்த 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் தலையெழுத்து அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்த 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் மாற்றங்கள் நிகழ உள்ளன. அது சில ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் சில ராசிகளுக்கு தீமைகள் உள்ளிட்டவைகளை கொடுக்கும். சில ராசிகள் கலவையான பலன்களையும் அனுபவிப்பார்கள்.
இந்த 2025 ஆம் ஆண்டு 12 ராசிக்காரர்களும் கலவையான பலன்களை பெறுகின்றனர். குறிப்பாக கடக ராசிக்காரர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு மிகவும் நல்ல ஆண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2025 புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
கடக ராசி பொது பலன்கள்
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் இதனை கேட்டு சலித்து இருப்பீர்கள். ஆனால் இந்த 2025 உங்களுக்கு உண்மையிலேயே மிகவும் நல்ல காலமாக இருக்கும் என கூறப்படுகிறது. இயல்பிலேயே தாய்மை எண்ணம் கொண்ட உங்களுக்கு பலவித சோதனைகள் கடந்த ஆண்டில் ஏற்பட்டிருக்கலாம். பெரிய சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் இந்த புத்தாண்டில் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.
கிரக பெயர்ச்சி
உங்கள் ராசியை பொறுத்தவரை குருபகவான் 9 மற்றும் ஆறாம் வீட்டின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். பல்வேறு விதமான சிக்கலான சூழ்நிலங்களில் இருந்து குருபகவான் உங்களை காப்பாற்றி வெளியேற்றுவார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து குரு பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய தொழிலில் இறங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
லாப ஸ்தானத்தில் பயணிக்க போகும் குரு பகவான் உங்களுக்கு கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கொடுக்க போகின்றார். பண வருவாய் உங்களுக்கு அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். பணவரவு உங்களுக்கு அதிகமாக இருக்கக்கூடும்.
வேலை
வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து பயணம் செய்தால் உங்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். திறமையை நிரூபிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் உங்கள் செயல் அதனை மாற்றி அமைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இருப்பினும் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. ராகு கேது இடமாற்றம் உங்களுக்கு சிக்கல்களை கொடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. எனவே நீங்கள் கடின உழைப்பை நம்பி பயணிப்பது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரம்
இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு கலவையான பலன்களை தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கப் போகின்றது. வெளியூர் சென்று தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக அமைந்துள்ளது. வேறு இடத்தில் சென்று வேலை செய்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். எதிரிகளால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். உங்களின் சொந்த தொழில் முன்னேற்றம் அடைய கூடும். நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த வாய்ப்புகள் மூலம் உங்களுக்கு அருமையான யோகங்கள் கிடைக்கும். குரு உங்களுக்கு தொழில் யோகத்தை கொடுக்கப் போகின்றார். ராகு பகவான் உங்களுக்கு நிதானமாக பலன்களை அள்ளிக் கொடுப்பார். கேட்டதை அப்படியே பொறுமையாக உங்களுக்கு செய்வார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.