மிதுன ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: என்னென்ன நடக்கும் என்று தெரியாது.. குரு வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறார்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மிதுன ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: என்னென்ன நடக்கும் என்று தெரியாது.. குரு வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறார்..!

மிதுன ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: என்னென்ன நடக்கும் என்று தெரியாது.. குரு வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறார்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 06, 2024 10:50 AM IST

Horoscope 2025: இந்த 2025 ஆம் ஆண்டு கலவையான பலன்களை 12 ராசிகளுக்கும் கொடுக்கப்போகின்றது. இந்த புத்தாண்டு 2025-ல் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி அமையும் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: என்னென்ன நடக்கும் என்று தெரியாது.. குரு வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறார்..!
மிதுன ராசி 2025 புத்தாண்டு ராசிபலன்: என்னென்ன நடக்கும் என்று தெரியாது.. குரு வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறார்..!

இந்த ஆண்டாவது நமக்கு சிறப்பாக இருக்காதா என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நமக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் அது நம் எண்ணத்தில் இருக்கின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் சூழ்நிலைகள் பொறுத்து ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணம் அமையும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு கலவையான பலன்களை 12 ராசிகளுக்கும் கொடுக்கப்போகின்றது. இந்த புத்தாண்டு 2025-ல் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி அமையும் என்பது குறித்து இங்கு காணலாம்.

வேலை

இந்த ஆண்டு உங்களுக்கு அனைத்தும் வெற்றியாக அமையும். தொழில் சம்பந்தப்பட்ட மற்றும் வேலை சம்பந்தப்பட்ட பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் வேலைக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் புதிய வாய்ப்புகளை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் கிடைக்கும். செய்யும் வேலையில் அதிக கவனம் தேவை. 

தொழில் மற்றும் வியாபாரம்

புதிதாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய விஷயங்களை தொழிலில் புகுத்தினால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு சரியான ஆலோசனை மிகவும் அவசியமாகும். 

சிந்தித்து செயல்படுவது நல்லது. வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை உடற்பயிற்சி உங்களுக்கு மிகவும் அவசியமாகும். தியானம் உங்களது சிந்தனையை தெளிவுபடுத்தும். வெளியே சென்று உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சோம்பேறித்தனத்தை கைவிட்டு விட்டு கடுமையான உழைப்பை கையில் எடுத்தால் உங்களுக்கு நல்லது. 

தூக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சரியான திட்டமிடுதல் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய பொறுப்புகளில் நேர்மையாக செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.

பரிகாரங்கள்

குரு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மிகப்பெரிய மருந்தாக அமையப் போகின்றது. தினமும் சூரியனை வழிபடுவது உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். விநாயகர் பெருமானை வழிபட்டால் உங்களுக்கு எந்தத் தீங்கும் அணுகாது. குரு பகவானை வழிபட்டால் உங்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner