தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ரத்தக்கண்ணீர் விடப் போகும் ராசிகள்.. தலைகீழாக தூக்கி அடிக்க போகும் செவ்வாய்.. தப்பிக்க முடியாத ராசிகள் இவங்கதான்

ரத்தக்கண்ணீர் விடப் போகும் ராசிகள்.. தலைகீழாக தூக்கி அடிக்க போகும் செவ்வாய்.. தப்பிக்க முடியாத ராசிகள் இவங்கதான்

May 05, 2024, 11:06 AM IST

Lord Mars: கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் குடி புகுந்தார். மீன ராசியில் பயணம் செய்யும் செவ்வாய் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
Lord Mars: கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் குடி புகுந்தார். மீன ராசியில் பயணம் செய்யும் செவ்வாய் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

Lord Mars: கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் குடி புகுந்தார். மீன ராசியில் பயணம் செய்யும் செவ்வாய் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

குருவின் ராட்சச படையல்.. டும் டும் டும் கொட்ட போகுது.. பணத்தில் கபடி விளையாட போகும் ராசிகள்

May 18, 2024 10:11 AM

கன்னா பின்னா பண மழை.. கதவை திறந்து வையுங்கள் பண மூட்டை கொட்ட போகுது.. ராஜ ராசிகள் நீங்களா?

May 18, 2024 10:04 AM

இதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் குடி புகுந்தார். மீன ராசியில் பயணம் செய்யும் செவ்வாய் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசி எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. உங்களுடைய வார்த்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேச்சால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வியாபாரம் மந்தமாக இருக்கும் நிதி ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கண் மற்றும் பல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களுக்கு அதிகம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிக்கல்கள் அதிகமாக ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரிடம் வாக்குவாதம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தராது. தொழில் தொடங்க நினைத்தால் சற்று தாமதமாக செய்வது நல்லது. நிதி ரீதியாக உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். வசதிகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். புதிய முடிவுகள் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி