தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips : வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டுவது ஏன் தெரியுமா? முக்கியமாக இதுக்குதான் கட்டுவார்கள்.. இதோ முழு விவரம்!

Vastu Tips : வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டுவது ஏன் தெரியுமா? முக்கியமாக இதுக்குதான் கட்டுவார்கள்.. இதோ முழு விவரம்!

Divya Sekar HT Tamil

Apr 16, 2024, 12:17 PM IST

google News
Lemons Vastu Tips : வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டுவது ஏன் தெரியுமா? இது நல்ல பலன்களை தருமா? எழுமிச்சையின் சிறப்பு என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
Lemons Vastu Tips : வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டுவது ஏன் தெரியுமா? இது நல்ல பலன்களை தருமா? எழுமிச்சையின் சிறப்பு என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

Lemons Vastu Tips : வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டுவது ஏன் தெரியுமா? இது நல்ல பலன்களை தருமா? எழுமிச்சையின் சிறப்பு என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

திருஷ்டிக்காக வீட்டில் எலுமிச்சை பழம் கட்டும் பழக்கம் பல பேருக்கு உண்டு. சில பேர் எலுமிச்சை பழத்துடன் சேர்த்து பச்சை மிளகாயை சேர்த்து கட்டுவார்கள். சிலர் எலுமிச்சை பழத்துடன் சேர்த்து வர மிளகாய் அதாவது காய்ந்த மிளகாயை கட்டுவார்கள்.

சமீபத்திய புகைப்படம்

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

எலுமிச்சை பழம் சிறப்பு என்னவென்றால் நாம் வெளியில் பல இடங்களுக்கு சென்று வருவோம். அது சில நேரங்களில் நல்ல விஷயங்களாக இருக்கும். சில நேரங்களில் கெட்ட விஷயங்களாக கூட இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டில் கட்டி வைத்தால் நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியே சென்று விடும் என்பது ஐதீகம்.

எலுமிச்சம் பழம் கட்டுவதற்கு முக்கிய காரணம் திருஷ்டி கழிவது. திருஷ்டி என்றால் பார்வை அதாவது கண் திருஷ்டி என்று சொல்வார்கள். இதில் நல்ல திருஷ்டியும் இருக்கும், கெட்ட திருஷ்டியும் இருக்கும்.

பொதுவாக சிலர் வீடு கட்டி விட்டார்கள் என்றால் அப்பொழுது இந்த எலுமிச்சை பழம் திருஷ்டி கட்டுவார்கள். ஏனென்றால் சிலர் பார்த்து கண் வைத்து விடுவார்கள். அதனால் தீங்கான சில விஷயங்கள் நடக்கும் என்பதால் அதனை தவிர்ப்பதற்கு கண் திருஷ்டி படாமல் இருப்பதற்கு இந்த எலுமிச்சை பழத்தை வீட்டின் முன்பு கட்டி வைப்பார்கள்.

எலுமிச்சை பழத்தை ஜம்பு வீர பழம் என்றும் சொல்வார்கள். இந்த எலுமிச்சை பழத்தின் சிறப்பு என்னவென்றால் நம்மை சுத்தி இருக்கக்கூடிய நெகட்டிவ் பைபை அதாவது கெட்ட சக்திகை போக்கிக் கொடுக்கும். இதற்கு எலுமிச்சை பழம் உப்பு, மிளகாய் ஆகியவற்றை பொதுவாக நாம் வாசலில் கட்டுவது வழக்கம் இதனால் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.

அதேபோல வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை அறிந்து அதில் மஞ்சள் குங்குமம் தேய்த்து வாசலின் இருபுறமும் வைக்கும் பழக்கம் உண்டு. அதாவது ஒருவர் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் அப்பொழுது இந்த எலுமிச்சை பழத்தை பார்த்தால் அவர்கள் கவனம் அதில் ஈர்க்கப்படுகிறது. அதனால் திருஷ்டி வீட்டில் படுவது இல்லை. இதுதான் எலுமிச்சை பழத்தை வீட்டில் வைக்க காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே இந்த எலுமிச்சை பழத்தை வீட்டில் கட்டுவது மூலம் நம் வீட்டில் உள்ள திருஷ்டி கழியும். அதேபோல மகிழ்ச்சி பொங்கும். இது தான் இந்த எலுமிச்சை பழம் வீட்டில் கட்டுவதின் ரகசியம்.

நமது மூதாதையர்கள் அக்காலத்தில்உடல் வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு மிக முக்கியமாக அமைந்த இந்த மூன்றும் முக்கிய பொருட்கள் நமது உணவுப் பொருட்களில் அத்தியாவசியமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் அக்காலத்தில் ஏற்ப பொருட்களை கட்டி தொங்க விடுவார்கள். இது ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை நீட்டிக்கும் என்று கூறப்பட்டது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி