தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Mohan Sharma Latest Interview About His Love Story With Actress Lakshmi

Mohan Sharma love story: மனதை மயக்கிய மோகம்.. ஹோட்டலுக்கு இழுத்த லட்சுமி.. குங்குமம் வைத்து கழிந்த முதல் இரவு! - மோகன்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 07, 2024 06:43 AM IST

எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவரிடம், நான் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் முதலில் குங்குமம் வைத்து விடுகிறேன் என்று சொல்லி குங்குமம் வைத்து விட்டேன். அதன் பின்னர் மற்றவை அரங்கேறியது. அது எங்களுடைய முதல் இரவாகவும் மாறியது.

மோகன் ஷர்மா!
மோகன் ஷர்மா!

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் அவர் பேசும் போது, “மும்பையில் வசித்த நான் ஷூட்டிங் இருக்கும் போது மட்டும் இங்கு வருவேன். இந்த நிலையில் ஒருமுறை லக்ஸ் விளம்பரத்தில் நடிப்பதற்காக மும்பை வந்திருந்த லட்சுமி, என்னை போனில் அழைத்து, எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டும். உதவ முடியுமா என்று கேட்டார். 

இதனையடுத்து நானும் அவரும் ஷாப்பிங் சென்றோம். ஷாப்பிங்கின் போது நான் சேவிங் செய்த பிறகு பயன்படுத்தக்கூடிய ஒரு சொல்யூஷனை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் விலை அப்போது 500 ரூபாய். நாய் வடிவத்தில் அந்த பாட்டில் இருந்ததே மிகவும் அழகாக இருந்தது. ஆனால் நான் அதனை வாங்கவில்லை. 

ஷாப்பிங் முடிந்து ஹோட்டலுக்கு வந்து இறங்கிய போது, நான் ஆசைப்பட்ட அந்த சொல்யூஷனை லட்சுமி என் கையில் கொடுத்து எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால், இந்த நாய் போல உங்களது வாழ்க்கையில் நான் இருப்பேன் என்று சொன்னார். 

இதைக் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. காரணம் நான் அப்படியான ஒரு விஷயத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அன்று இரவு தூக்கமே இல்லை. இதனையடுத்து நான் காலையில் அவரை சென்று சந்தித்தேன் 

அவர் எனக்காக ஷூட்டிங்கை கேன்சல் செய்து இருந்தார். இருவரும் சாப்பிடச் சென்றோம். அப்போது மிகவும் ஓப்பனாக என்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார். 

அதன் பின்னர் அவர் ஹோட்டல் ரூமிற்கு அழைத்துச் சென்றார் அங்கு சென்ற பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பதை என்னால் கணிக்க முடிந்தது. எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவரிடம் நான் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் முதலில் குங்குமம் வைத்து விடுகிறேன் என்று சொல்லி குங்குமம் வைத்து விட்டேன். அதன் பின்னர் மற்றவை அரங்கேறியது. அது எங்களுடைய முதல் இரவாகவும் மாறியது. அதன் பின்னர் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். 

வாழ்க்கை நல்ல படியாக சென்று கொண்டிருந்த நிலையில், லட்சுமி சில பேருடன் தவறான உறவில் ஈடுபட்டார். இதற்கிடையே அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும்,லட்சுமிக்கும் இடையே முட்டல் மோதல்கள் நடந்தன. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா கோபத்தில் கொந்தளிக்க, லட்சுமியோ அவருக்கு எதிராக செயல்பட போவதாக சொல்லி ஒரு மகளை தத்தெடுத்துக் கொண்டார் 

ஆனால் அது தத்தெடுத்த குழந்தை கிடையாது. லட்சுமி என்னிடம் ருக்மணி அம்மாவை தன்னுடைய அம்மா இல்லை என்று ஒரு முறை சொன்னார். இந்த பிரச்சனைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ருக்மணி அம்மா என்னிடம், கடவுளே நினைத்தாலும் இனி லட்சுமி போல் ஒருவரை அவரால் படைக்க முடியாது என்று வருந்தினார்.

லட்சுமிக்கும், எனக்கும் பிரச்சினைகள் மூண்டது. இருவரும் தனித்தனி பெட்ரூமில் தங்க ஆரம்பித்தோம். நான் ஒருமுறை விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஐஸ்வர்யா என்னிடம் வந்து அம்மா யாரிடமுமோ அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். அதில் மனமுடைந்த நான் அப்படியே அந்த வீட்டில் வெளியே வந்து விட்டேன்” என்று பேசினார்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்