மனக் கஷ்டமும் பணக் கஷ்டமும் தீர இந்த செலவே இல்லாத பரிகாரத்தை பண்ணுங்க.. ரிசல்ட்டை கண்கூடாக பார்க்கலாம்!
Oct 09, 2024, 12:10 PM IST
தினமும் இரவு தூங்குவதற்கு முன்னாடி ஒரு சின்ன கிண்ணத்துல ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி அளவு வெல்லம் அல்லது நாட்டு சக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் தான். இதில் எதையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் இரண்டில் ஒன்றை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி வைத்து விடுங்கள்.
நீங்க பல கோடிகளுக்கு அதிபதியாகவும் மாறக்கூடிய ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பை உங்களுக்கு இந்த பரிகாரம் கொண்டு வந்து சேர்க்கும். அப்படி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்த பரிகாரம் பண்றதுக்கு ஆயிரக்கணக்கில் நீங்க செலவழிக்க வேண்டிய அவசியமே கிடையாது. நீங்க வாங்கின கடனை திருப்பிக் கொடுப்பதற்கு இந்த எளிய பரிகாரமே போதும். இந்த எளிய பரிகாரம் பண்றதுக்கு உங்க வீட்ல பாசிப்பருப்பு இருந்தாலே போதும் என சொல்கிறார்கள். இந்த பாசிப்பருப்பு பரிகாரத்தை செஞ்சாலே நீங்க கடனை திருப்பிக் கொடுக்கிறதுக்கு மிகப்பெரிய அளவில் உங்களுக்கு செல்வ வளம் பல வழிகளில் இருந்து வந்து சேருமாம்.
சமீபத்திய புகைப்படம்
உங்களின் கஷ்டம் உங்களை விட்டு ஏதாவது ஒரு வழியில போய்விடும். இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என தெரிந்து கொள்வோம். இந்த பரிகாரத்துக்கு நமக்கு தேவையான பொருள் பாசிப்பருப்பு. பொங்கலுக்கு சேர்ப்பார்கள். சிறு பருப்பு என்றும் சில பேர் கூறுவார்கள். இந்த பருப்பு ஒரு கிலோ வாங்கி உங்க வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்குவதற்கு முன்னாடி ஒரு சின்ன கிண்ணத்துல ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி அளவு வெல்லம் அல்லது நாட்டு சக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பம் தான். இதில் எதையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் இரண்டில் ஒன்றை போட்டு அதில் தண்ணீரை ஊற்றி வைத்து விடுங்கள்.
கோமாதா குலமாதா
மறுநாள் காலையில் இது நல்லா ஊரிடும். இதை அப்படியே கொண்டு போயி பசு மாட்டிற்கு உங்கள் கையால் கொடுத்துவிட்டு அம்மா கோமாதா என்னோட கடன் எல்லாம் தீர்ந்து போக வேண்டும் என்று அந்த கோமாதாதேவி இடம் வேண்டிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். கோமாதாவின் ஆசீர்வாதம் மனப்பூர்வமாக உங்களுக்கு கிடைக்கும். இதை இத்தனை நாட்கள் தான் செய்யணும். இந்த பரிகாரத்தை செய்ய எந்த ஒரு கணக்கும் கிடையாது. உங்க கையால் பாசிப்பருப்பை எவ்வளவு பசு மாட்டிற்கு கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களோட செல்வ செழிப்பு உங்களுக்கு கூடிகிட்டே போகும் என நம்பப்படுகிறது.
நீங்கள் வாங்கிய கடன் எல்லாத்தையுமே திருப்பி கொடுத்துடலாம். நீங்க மத்தவங்களுக்கு கடன் கொடுக்கிற அளவுக்கு உங்க கைல பணப்புழக்கம் அதிகரிக்கும்னா நீங்களே பாத்துக்கோங்க. இது ரொம்ப ரொம்ப சுலபமான பரிகாரம். கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்க. அதுபோல இந்த பாசிப்பருப்பை முடிந்த அளவுக்கு தானமாக கொடுக்கலாம். முக்கியமாக புதன்கிழமை அன்று பாசிப்பருப்பை தானமாக கொடுத்தால் உங்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும் என கூறுகிறார்கள்.
யாருக்கு தானமாக கொடுக்கலாம்?
யாருக்கு தானமாக கொடுக்கலாம் என்றால், கோயிலில் இருக்கிறவர்களுக்கு கொடுக்கலாம். ஏழை குடும்பத்திற்கு ஒரு கிலோ பாசிப்பருப்பு வாங்கி தானம் கொடுக்கலாம். தானமாக பெற்றவர்கள் அந்த பாசிப்பருப்பை சமைத்து சாப்பிட்டாலே உங்க குடும்பத்தில் இருக்கிற பணக்கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து விடும்.
அதுபோக ரொம்ப எளிய ஒரு பரிகாரம் இருக்கிறது. கடைகளில் வருத்த பாசி பருப்பு விக்கும். அதை வாங்கி காக்கை குருவிகளுக்கு சாப்பிட கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது என கூறப்படுகிறது. பாசிப்பருப்பு பாயாசம் செய்து ஏழைகளுக்கு உங்க கையாலே சாப்பிட கொடுப்பது ரொம்ப ரொம்ப விசேஷம். பாசிப்பருப்பு அன்னதானம் செய்யலாம். இப்படி பாசிப்பருப்பை நீங்க தானமா கொடுத்தீர்கள் என்றால், உங்களோட கஷ்டங்களும் கடன்களும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு குறைந்துவிடும் என கூறப்படுகிறது.
நீங்களும் மிகப்பெரிய அளவில் பணக்காரராக மாறக்கூடிய வாய்ப்பு உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய பணக்கஷ்டங்கள் எல்லாம் குறையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வீட்டில் பணக்கஷ்டங்களுடன் சேர்ந்து சில பேருக்கு மனகஷ்டங்கள் இருக்கும். அந்த மனக்கஷ்டங்களும் தீரும். உங்கள் வீட்டில் சந்தோசம் நிறைவாக இருக்கும். நீங்களும் மிகப்பெரிய அளவில் பணக்காரராக மாறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்