தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kamika Ekadasi: வருகிறது காமிகா ஏகாதசி.. இந்த நாளில் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

Kamika Ekadasi: வருகிறது காமிகா ஏகாதசி.. இந்த நாளில் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

Marimuthu M HT Tamil

Jul 29, 2024, 03:37 PM IST

google News
Kamika Ekadasi: வருகிறது காமிகா ஏகாதசி.. இந்த நாளில் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம். (pixabay)
Kamika Ekadasi: வருகிறது காமிகா ஏகாதசி.. இந்த நாளில் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.

Kamika Ekadasi: வருகிறது காமிகா ஏகாதசி.. இந்த நாளில் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.

Kamika Ekadasi: இந்து மக்கள் ஏகாதசி தினத்தில் பெருமாளை வழிபடுகின்றனர். காமிகா ஏகாதசி ஆனது, சவான் மாதம் என்று அழைக்கப்படும் ஆடி மாதத்தின் கிருஷ்ண பட்சத்தின் ஏகாதசி திதியில் நிகழ்கிறது. அதன்படி, இந்த காமிகா ஏகாதசியானது வரும் ஜூலை 31ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது.

சமீபத்திய புகைப்படம்

குருபகவான் பாடல் தெரியுமா?.. பண ராகத்தில் விளையாடும் ராசிகள்.. இனி உச்சம் தொடுவது உறுதி!

Dec 05, 2024 07:00 AM

இந்த மூன்று ராசிகளுக்கு பண மழை பொழியும்.. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.. அதிஷ்டம் உங்க பக்கம்!

Dec 05, 2024 06:10 AM

‘நிம்மதி தேடி வரும்.. பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Dec 05, 2024 05:00 AM

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

காமிகா ஏகாதசி நாளின் முக்கியத்துவம்:

இந்த ஆண்டு காமிகா ஏகாதசி விரதம் ஜூலை 31அன்று அனுசரிக்கப்படுகிறது. காமிகா ஏகாதசி விரத நாளில், முதலில் ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், காமிகா ஏகாதசியின் கதையை இந்த நாளில் படிப்பர். இந்த கதையைக் கேட்பதன் மூலம் புண்ணிய பலன் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தில் புனித நீர்நிலைகளில் நீராடுவதன் மூலம் கிடைக்கும் புண்ணியம், காமிகா ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்குவதன் மூலமும், காமிகா ஏகாதசி பற்றிய புராண கதையைக் கேட்பதன் மூலமும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

காமிகா ஏகாதசி விரதத்தின் கதை: 


ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில் ஒரு சத்திரியர் வாழ்ந்து வந்தார். அவர் தன்னைப் பற்றி மிகவும் பெருமைப்படுபவர். குறிப்பாக அவர் தனது சக்தி மற்றும் வலிமையைப் பற்றி பெருமிதம் கொண்டு இருப்பார். அந்த சத்திரியர் கடவுளை மிகவும் நம்பினார். ஆனால் அவர் இதயத்தில் ஆணவம் இருந்தது. இருந்தாலும், அவர் ஒவ்வொரு நாளும் விஷ்ணுவை வணங்குவதில் ஆர்வத்துடன் இருப்பார். 

ஒரு நாள், அவர் ஒரு முக்கியமான வேலையாக வீட்டை விட்டு வெளியே சென்றார், சத்திரியர். வழியில் ஒரு பிராமணரைச் சந்தித்தார். இருவருக்கும் ஏதோ ஒரு விஷயமாக சண்டை ஏற்பட்டது. சண்டை முற்றி, இந்த விவகாரம் கைகலப்பாக மாறியது. சத்திரியர் மிகவும் வலிமையானவன். எனவே, பிராமணர் தனது பலவீனத்தால் சத்திரியரின் தாக்குதலைத் தாங்க முடியாமல் அங்கேயே விழுந்து இறந்தான்.

பிராமணரின் மரணத்தைக் கண்டு சத்திரியர் திகைத்தான். தன் தவறை உணர்ந்து அதற்காக மிகவும் வருந்தினார். இந்தச் சம்பவம் கிராமத்தில் காட்டுத்தீ போல் பரவியது. சத்திரிய இளைஞர் கிராம மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, பிராமணரின் இறுதிச் சடங்குகளை தானே செய்வதாக உறுதியளித்தார். ஆனால், பண்டிதர்கள் அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். 

பின்னர் அவர் ஞானமுள்ள பண்டிதர்களிடமிருந்து தனது பாவம் குறித்து அறிய விரும்பினார். பின்னர் பண்டிதர்கள் அவரிடம் ' இது தவறு. இதனை பிரம்ம கொலை என்பர்' என்று வேதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், அப்போது, இறுதிச்சடங்கின் கடைசி படிகளில் ஒன்றான, பிராமண விருந்தில் ’சத்ரியன் வீட்டில் நாங்கள் சாப்பிட முடியாது’ என்று பிராமணர்களும் பண்டிதர்களும் கூறினர். இதைக் கேட்ட சத்திரியர், 'பிரம்ம கொலை பாவத்தை' நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம் உண்டு என்று கேட்டார்?

பிறகு பண்டிதர்கள் கலந்து ஆலோசித்து, சாவன் மாதம் என்று அழைக்கப்படும், தமிழ் மாதத்தில் வரும் ஆடி மாதத்தில், கிருஷ்ணபட்சத்தின் ஏகாதசி நாளன்று விஷ்ணுவை வழிபட்டு, பிராமணர்களுக்கு உணவு அளித்து தானம் செய்யாவிட்டால், அவர் பிரம்ம வத பாவத்தில் இருந்து விடுபட முடியாது என்று கூறினார்கள். 

கொலையுண்ட பிராமணரின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, பண்டிதர்களின் ஆலோசனையைப் பின்பற்றி, காமிகா ஏகாதசி நாளில் சத்திரியர் விஷ்ணுவை முழு பயபக்தியுடனும் முறையுடனும் வணங்கினார். பின்னர் அவர் பிராமணர்களுக்கு உணவு வழங்கினார் மற்றும் தானமும் செய்தார். இவ்விதம் மகாவிஷ்ணுவின் அருளால் அந்த சத்திரியர் பிரம்ம வத பாவத்தில் இருந்து விடுபட்டான் என்று புராணக்கதை சொல்கிறது. 

இதனால், விஷ்ணுவை வணங்குவதும், உணவு தானம் செய்வதும் ‘காமிகா ஏகாதசி நாளில்’ உகந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி