Trichy Surya Vs Annamalai:’தமிழக பாஜகவில் பிராமணர், கவுண்டர், நாடார் லாபி?’ அண்ணாமலையை குறிவைக்கும் திருச்சி சூர்யா!
Trichy Surya Vs Annamalai: இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா? என திருச்சி சூர்யா கேள்வி

’பாஜகவில் சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?’ என அண்ணாமலை, தமிழிசை, எஸ்.வி.சேகர் ஆகியோரின் சாதிகளை குறிப்பிட்டு பாஜக உறுப்பினர் திருச்சி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சி சூர்யா
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்த திருச்சி சூர்யா, பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்த நிலையில், கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் கருத்து கூறியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கட்சித் தலைமையை விமர்சனம் செய்து ட்வீட்!
தற்போது பாஜகவின் அடிப்படை உறுப்பினராக மட்டும் இருக்கும், திருச்சி சூர்யா சிவா தனது ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில், ”பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராம அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன்.