தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chitra Poornami: ‘சித்ர குப்தனுக்கு உகந்த சித்ரா பௌர்ணமி இன்று! இந்த வழிபாட்டை செய்தால் வெற்றி நிச்சயம்!’

Chitra Poornami: ‘சித்ர குப்தனுக்கு உகந்த சித்ரா பௌர்ணமி இன்று! இந்த வழிபாட்டை செய்தால் வெற்றி நிச்சயம்!’

Kathiravan V HT Tamil

Apr 23, 2024, 05:30 AM IST

google News
”தமிழ் ஆண்டின் முதல் மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு நாளாக உள்ளது. இந்த நாள், புதிய தொடக்கங்களுக்கும், நல்ல அதிர்ஷ்டத்திற்கும் ஒரு சிறந்த நாளாக கருதப்படுகிறது”
”தமிழ் ஆண்டின் முதல் மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு நாளாக உள்ளது. இந்த நாள், புதிய தொடக்கங்களுக்கும், நல்ல அதிர்ஷ்டத்திற்கும் ஒரு சிறந்த நாளாக கருதப்படுகிறது”

”தமிழ் ஆண்டின் முதல் மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு நாளாக உள்ளது. இந்த நாள், புதிய தொடக்கங்களுக்கும், நல்ல அதிர்ஷ்டத்திற்கும் ஒரு சிறந்த நாளாக கருதப்படுகிறது”

பௌர்ணமி என்று சொன்னால் அனைவருக்கும் முழுமை என்று நினைவுக்கு வரும். அதிலும் சித்ரா பௌர்ணமி என்பது மிக விஷேஷமான நாளாக விளங்குகிறது. சித்ரா என்ற சொல்லுக்கு சித்தம் என்று பொருள், இது நமது மனதை குறிக்கிறது. மனதின் காரகணான சந்திரனுக்கு இந்த நாள் மிக உகந்த நாளாக உள்ளது. 

சமீபத்திய புகைப்படம்

மகரத்தில் நுழையும் சுக்கிரன்! திருமண யோகம் கைக்கூடும் 6 ராசிகள்! இனி மஜாதான்!

Nov 28, 2024 07:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.29 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன்கள் இதோ!

Nov 28, 2024 04:23 PM

வெறிபிடித்து வரும் செவ்வாய்.. அள்ளி அள்ளி சுவைக்கும் ராசிகள்.. இனி பொட்டி பொட்டியாக வரும்!

Nov 28, 2024 04:06 PM

உதயத்தில் போட்டு சாத்த போகும் புதன்.. பணத்தில் பிச்சுகிட்டு பறக்க போகும் ராசிகள்.. இனி உச்சகட்ட சந்தோஷம் வரும்

Nov 28, 2024 04:02 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..யாருக்கு லாபமான நாள்?..நாளை நவ.29 ராசிபலன்கள் இதோ..!

Nov 28, 2024 04:00 PM

சனி தாண்டவம்.. இனி தொட்டுப் பார்க்க முடியாத ராசிகள்.. முடிஞ்சா டச் பண்ணி பாருங்க தெரியும்!

Nov 28, 2024 12:45 PM

தமிழ் ஆண்டின் முதல் மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு நாளாக உள்ளது. இந்த நாள், புதிய தொடக்கங்களுக்கும், நல்ல அதிர்ஷ்டத்திற்கும் ஒரு சிறந்த நாளாக கருதப்படுகிறது. சித்ரா பௌர்ணமி, நம்முடைய பாவங்களை சரி செய்து நல்ல வாழ்க்கையை வாழ உதவும் ஒரு புனித நாளாக கருதப்படுகிறது. 

இந்த நாளில் சித்ர குப்தன் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நாளில் சித்ர குப்தனை வழிபட்டால் நமது பாவ கணக்கை மற்றி புண்ணிய கணக்காக மாற்றுவார் என்பது தவறான தகவல். பாவங்கள் செய்ய விடாது, புண்ணியம் செய்யக் கூடிய நல்ல மனநிலையை சித்ர குப்தர் அளுருவார் என்பது ஐதீகமாக உள்ளது. 

இந்த நாளில் சித்ர குப்தனை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய மனதில் ஏற்படக்கூடிய பாவ எண்ணங்களை மாற்றி நல்ல எண்ணங்களை சித்ர குப்தர் அளுருவார். 

அதனால்தான் சித்ரா பௌர்ணமி அன்று ஏடும், எழுத்தாணியும் வைத்திருக்கும் சித்ர குப்தனை வழிபாடு செய்வது உகந்ததாக பார்க்கப்படுகிறது. 

சித்ர குப்தன் கேது பகவானுக்கு அதிதேவதையாக உள்ளதால் கேது தச,  கேது புத்தி உள்ளவர்கள் பருப்பு வகைகள், எலுச்சை சாதம், மோர் ஆகிய தானங்களை செய்ய வேண்டும். 

சித்ர குப்தனின் அருளால், நம்முடைய அடுத்த பிறவியில் நல்ல வாழ்க்கை பெற முடியும் என்று நம்பப்படுகிறது. கல்வி, ஞானம் பெற: சித்ர குப்தன், கல்வி மற்றும் ஞானத்தின் தெய்வமாகவும் கருதப்படுகிறார். அவரை வழிபடுவதன் மூலம், கல்வியில் சிறந்து விளங்கவும், ஞானம் பெறவும் முடியும் என்று நம்பப்படுகிறது.

கல்வியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை தானமாக தருவது மிகுந்த நன்மைகளை ஏற்படுத்தும். 

சித்ரா பௌர்ணமி சிவபெருமானுக்கு மிக விஷேஷமான நாளாக உள்ளது.  குறிப்பாக மலைத்தளங்களில் எழுந்தருளி உள்ள சிவ தலங்களில் கிரிவலம் செய்வது நன்மைகளை ஏற்படுத்தி தரும். 

திருவண்ணாமலை மட்டுமின்றி திருக்கழுக்குன்றம் கோயிலிலும் கிரிவலம் செய்வது சிறப்பு வாந்ததாக உள்ளது. சிவபெருமான் கோயில் மட்டுமின்றி முருகன் எழுந்தருளி உள்ள திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட கோயில்களிலும் கிரிவலம் நடக்கிறது. 

இந்த ஸ்தலங்களில் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செய்வது சிறப்பு வாய்ந்தது. சித்ரா பௌர்ண்மி அன்று நாரயணருக்கு செய்யக்கூடிய சத்ய நாராயண பூஜையை செய்வது நன்மைகளை தரும். 

மேற்கண்டவற்றில் எதையும் செய்ய முடியாதவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் சிவபெருமான் கோயிலுக்கு சென்று 11 முறை சென்று வழிபாடு செய்தால் நன்மைகள் கிடைக்கும். 

சித்ரா பௌர்ணமி வழிபாடு செய்யும் முறை:-

வீட்டிலோ அல்லது ஆற்றங்கரைகளிலோ மாலை 6 மணிக்கு மேல் நெய் விளக்கு ஏற்றி சிவபெருமானை வணங்கி புளிசாதம், சர்க்கரை பொங்கல் போன்ற சித்ர அன்னங்களை நெய் வைத்யம் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி