தமிழ் செய்திகள்  /  Astrology  /  Benefits Of Lakshmi Panchami Day Worship

Lakshmi Vratham: லட்சுமி கடாட்சம் தரும் லட்சுமி பஞ்சமி!

Mar 26, 2023, 10:25 AM IST

லட்சுமி பஞ்சமி தினமான இன்று வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகமாகும்.
லட்சுமி பஞ்சமி தினமான இன்று வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகமாகும்.

லட்சுமி பஞ்சமி தினமான இன்று வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகமாகும்.

புராணத்தில் அமிர்தம் கடந்த நிகழ்வானது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். மகாவிஷ்ணுவின் விருப்பத்தின் காரணமாகத் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அந்த திருப்பாற்கடலில் ஸ்ரீ மகாலட்சுமி தோன்றினாள். அந்த திருநாள் தான் லட்சுமி பஞ்சமி என அழைக்கப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு.. அங்காரக யோகத்தில் அடி.. ஜூன் மாதத்தில் இருந்து தலை தெறிக்க ஓடப்போகும் ராசிகள்

May 03, 2024 01:10 PM

பிரிந்து போன ராகு சூரியன்.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. பணத்தின் மிதக்க போவது உங்கள் ராசியா?

May 03, 2024 10:53 AM

குருவிடம் மே மாதம் சிக்கிக்கொண்ட ராசிகள்.. உங்களை புரட்டி எடுக்கப் போகிறார்.. நீங்க என்ன ராசி என்று பாருங்க!

May 03, 2024 10:42 AM

Love Horoscope Today: திருமணமானவர்களுக்கு திருமண யோகம் கூடும்.. . இருவருக்கும் இடையேயான காதல் மீண்டும் துளிர்விடலாம்!

May 03, 2024 08:24 AM

Today Horoscope: ‘மகிழ்ச்சியும் லாபமும் காத்திருக்கு.. உழைப்பு முக்கியம்’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

May 03, 2024 06:26 AM

விடாமல் விரட்டி விரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. திட்டத்தில் சிக்கிய ராசிகள்.. கட்டத்தை மாற்ற முடியாது..!

May 02, 2024 02:48 PM

லட்சுமி பஞ்சமி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணு பகவான், ஸ்ரீ மகாலட்சுமி இருவருக்கும் மல்லிகைப் பூக்களால் அர்ச்சனை செய்து லட்சுமி சஹஸ்ரநாமம் மற்றும் லட்சுமி ஸ்லோகம் சொல்லி வழிபடலாம். இதனால் குடும்பத்தில் இருக்கும் ஏழ்மை நிலையானது விலகும்.

பஞ்சமி விரதம்

இந்த பஞ்சமி விரதம் இருப்பதன் மூலமாகத் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வளம் பெருகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். புதிய சொத்துக்கள் சேரும் எனக் கூறுகிறது.

விடியற்காலை எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து விட்டு, குளித்து விட வேண்டும். பின்னர் பூஜை அறையில் ஒரு பலகை வைத்து அதில் கோலம் போட்டு மங்களகரமான கலசத்தை ஆவாகனம் செய்யவும்.

அந்த கலசத்தில் லட்சுமி மந்திரங்களை எழுதி வேண்டும். அந்த கலசத்தில் மகாலட்சுமி அமர வேண்டும். இந்த பூஜையை ஏற்றுக் கொண்டு எங்களது வாழ்வில் சுபிட்சத்தைத் தர வேண்டும் என மகாலட்சுமியின் மனதார வேண்ட வேண்டும்.

குதிரை பூஜை

ஹயபஞ்சமி தினமான இன்று குதிரையைப் பூஜிக்க வேண்டிய சிறப்பு நாளாகும். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்த போதும் பறக்கும் சக்தி கொண்ட தேவ குதிரை ஒன்று தோன்றியது. அது தோன்றிய தினமும் இந்த பஞ்சமி திருநாள் தான்.

குதிரை வடிவில் தோன்றி ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி அருள் புரிந்தார் எனக் கூறப்படுகிறது. இவரை வழிபட்டால் தொடர்ந்து வந்த வழக்குகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என ஆன்மீகம் கூறுகிறது.

லட்சுமி விரதம், குதிரை பூஜை தின ஒரே நாளில் அமைந்துள்ள இந்த பஞ்சமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து சுபிட்சத்தையும் பெறலாம் என்பது ஐதீகம் ஆகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்