KRISHNA JAYANTHI RASIPALAN: நாளை கிருஷ்ண ஜெயந்தி! குரு உடன் இணையும் சந்திரன்! பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்!
Aug 25, 2024, 09:17 PM IST
KRISHNA JAYANTHI RASIPALAN: ஜென்மாஷ்டமி நாளில், ரிஷப ராசியில் உள்ள குரு பகவான் உடன் சந்திரன் இணைவதால் ஷஷ் ராஜ்யயோகமும் கஜகேசரி யோகமும் உருவாகிறது. ஜோதிடர் அனிதா பராசரின் கூற்றுப்படி, நான்கு ராசிக்காரர்களுக்கும் ஜென்மாஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்தாக குறிப்பிடப்படுகின்றது.
கிருஷ்ண பரமாத்மா பிறந்த நாள் ஆனது கோகுலாஷ்டமி அல்லது ஜென்மாஷ்டமி என்ற பெயரில் நாளையும், நாளை மறுநாளும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
சமீபத்திய புகைப்படம்
தீய சக்திகளை வென்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
கிருஷ்ணர் தன் வாழ்நாளில் பல தீய சக்திகளை வென்று, நன்மையை நிலைநிறுத்தியவர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையிலும், நன்மையின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகள் மற்றும் கோயில்களில் கிருஷ்ணனின் பிறப்பிடமான கோகுலத்தைப் போன்று அழகாக அலங்கரிக்கப்பட்டு உறி அடிப்பது உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும்.
முதல் நாள் கொண்டாட்டத்தில் இல்லறத்தாரும், இரண்டாம் நாள் வைணவ பிரிவினரும் ஜென்மாஷ்டமி பண்டிகையை பக்தி உடன் கொண்டாடுகின்றனர். பகவான் கிருஷ்ணர் அஷ்டமி திதியில் பிறந்தார் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நாளான ஆகஸ்ட் 26-ம் தேதி சர்வார்த்த சித்தி யோகம் உருவாகி, ரிஷபம் ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பதால் சிறப்பு யோகம் உருவாகிறது.
அதனால்தான் இந்த ஆண்டு ஜென்மாஷ்டமி மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் விரும்பிய பலன்களைத் தருவதாக அமையும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜென்மாஷ்டமி நாளில், ரிஷப ராசியில் உள்ள குரு பகவான் உடன் சந்திரன் இணைவதால் ஷஷ் ராஜ்யயோகமும் கஜகேசரி யோகமும் உருவாகிறது. ஜோதிடர் அனிதா பராசரின் கூற்றுப்படி, நான்கு ராசிக்காரர்களுக்கும் ஜென்மாஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்தாக குறிப்பிடப்படுகின்றது.
மேஷம்
செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷம் ராசிக்கார்கள் கிருஷ்ண ஜெயந்தி நாள் அன்று நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வேகம் பெறும். தடைபட்டு இருந்த பணவரவுகள் கிடைக்கும். நிதிசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
சுக்கிர பகவானை அதிபதியாக கொண்ட ரிஷபம் ராசியில் குரு பகவான் உள்ளார். நாளைய தினம் சந்திரன் ரிஷப ராசிக்கு வருகிறார். இந்த இணைவு மூலம் நீங்கள் அனைவரின் மனதையும் வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் தொடர்பான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கிருஷ்ணர் வழிபாடு வாழ்கையில் மேம்பாட்டினை தரும்.
சிம்மம்
சூரிய பகவானை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் சமூகத்தில் மரியாதை பெறுவார்கள். புதிய வேலையைத் தொடங்குவதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். இதன் மூலம் வாழ்கையில் முன்னேற்றங்கள் கூடும். இந்த நாளில் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்வது வாழ்கையில் முன்னேற்றம் தருவதாக அமையும்.
கும்பம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்பம் ராசிக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் நிறைந்ததாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.