விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் புதன்.. கிட்டிய புதிய வாழ்வு.. மந்தமாக இருந்த தொழிலில் கொடிகட்டிப்பறக்கப்போகும் 3 ராசிகள்
Nov 01, 2024, 06:57 PM IST
விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் புதன்.. கிட்டிய புதிய வாழ்வு.. மந்தமாக இருந்த தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.
நவக்கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.
சமீபத்திய புகைப்படம்
இந்தப் பதிவில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி விருச்சிக ராசியில் நடைபெற இருக்கும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
ஜோதிடத்தின்படி, கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதி, புதன் பகவான். புதன் பகவான் ஒருவரது ஞானம், நகைச்சுவைத்தன்மை, சீக்கிரமாக யோசித்து பதிலளிக்கும் தன்மை ஆகியவற்றிற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறார்.
அத்தகைய புதன் பகவான், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மாலை 22:24 மணிக்கு விருச்சிக ராசிக்குள் பெயர்ச்சியாகியுள்ளார். செவ்வாய்க்குரிய ராசியான விருச்சிகத்தில் புதன் பெயர்வது நல்லதல்ல. ஏனெனில் செவ்வாய்யும் புதனும் சண்டைக்குரிய கிரகங்கள் ஆகும்.
அதன்படி, விருச்சிக ராசியில் புதன்பெயர்ச்சியினால், சில கிறுக்குத்தனங்கள் நடக்கும். சிலருக்கு நன்மைகளைத் தரும்.
விருச்சிக ராசியில் புதனின் சஞ்சாரத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு புதன் பகவான் இரண்டு மற்றும் ஐந்தாம் இல்லத்தில் இருந்து ஆளுகை செலுத்துகிறார். விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி ஆவது தொழில் மற்றும் பெர்ஷனல் வாழ்க்கையில் பிறரின் நட்பினை நல்ல விதமாக மாற்றக்கூடியது. வெகுநாட்களாக நட்பில் இருக்கும் ஆண், பெண் தங்கள் காதலை உங்கள் எதிர்கால வாழ்க்கைத்துணையிடம் இந்த தருணத்தில் சொல்லலாம். மேலும், இந்த காதல் விவகாரத்தை வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்டால்கூட உடனடியாக அனுமதி கிடைத்துவிடும்.
திருமணமான ரிஷப ராசியினருக்கு, இல்வாழ்க்கையில் அந்நியோன்யம் கூடும். தாம்பத்திய உறவில் கணவன் - மனைவி இடையே பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்க முடியும்.
சிம்மம்:
விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு, வெகுநாட்களாக வாங்க ஆசைப்பட்ட சொத்துக்களை சந்தோஷமாக வாங்குவீர்கள். அதாவது வீடு, கார் மற்றும் நிலம் ஆகியவற்றை இந்தக் காலத்தில் வாங்குவீர்கள். மேலும், ஏதேனும் முதலீடுகளை சிம்ம ராசியினர் செய்யலாம். குறிப்பாக, உங்கள் பேச்சு இனிமையாகும். இந்தக் காலத்தில் தொழில் முனைவோருக்கு மந்தமாக இருக்கும் அவர்களது தொழில் வேகம் பிடிக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.
மகரம்:
விருச்சிகத்தில் புதன்பெயர்ச்சி அடைவதால், அரசு வேலைகளுக்கு அல்லது பெரிய நிறுவனங்களுக்கு மகர ராசியினர் இந்தக் காலத்தில் முயன்றால் பாஸிட்டிவ் ஆன ரிசல்ட் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. வெகுநாட்களாக தொழில் தொடங்க முயன்று வரும் மகர ராசியினருக்கு, வங்கிகளில் நிதியுதவி கிடைக்கலாம். ரத்த சொந்தக்காரர்கள் மூலம் ஆதரவு கிடைக்கலாம். இந்தக் காலத்தில் உங்கள் பொருளாதாரம் உயரும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்புகள் உருவாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்