27 வருடங்கள் ஆச்சு..ஆண்களை போல் பெண்களுக்கும் அது தேவை - இப்போ ஜோதிகா ஹாப்பி - சூர்யா பிரேக்கிங்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  27 வருடங்கள் ஆச்சு..ஆண்களை போல் பெண்களுக்கும் அது தேவை - இப்போ ஜோதிகா ஹாப்பி - சூர்யா பிரேக்கிங்

27 வருடங்கள் ஆச்சு..ஆண்களை போல் பெண்களுக்கும் அது தேவை - இப்போ ஜோதிகா ஹாப்பி - சூர்யா பிரேக்கிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Oct 30, 2024 08:48 AM IST

27 வருடங்கள் ஆச்சு, ஆண்களை போல் பெண்களுக்கும் நண்பர்கள் மற்றும் பொருளாதார சுதந்திரம் தேவைப்படுகிறது. மும்பையில் ஜோதிகா குடிபெயர்ந்தன் பின்னணி காரணமாக சூர்யா விவரித்துள்ளார்.

27 வருடங்கள் ஆச்சு..ஆண்களை போல் பெண்களுக்கும் அது தேவை
27 வருடங்கள் ஆச்சு..ஆண்களை போல் பெண்களுக்கும் அது தேவை (Sunil Khandare)

இதற்கிடையே கமிட்டான படங்களிலும் நடித்து வருகிறார். இதேபோல் ஜோதிகாவும் தான் கமிட்டாகி இருக்கும் புதிய படஙகளில் கவனம் செலுத்து வருகிறார்.

27 வருடங்கள் ஆகிறது

இந்த சூழ்நிலையில், ஜோதிகா மும்பையில் தற்போது செட்டிலாகி இருப்பது பற்றி சூர்யா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "நான் மிகவும் வெளிப்படையாக சொல்கிறேன். 18-19 வயதில் ஜோதிகா சென்னைக்கு வந்தார். கிட்டத்தட்ட 27 வருடங்கள், சென்னையில் இருந்த அவர் 18 வருடங்கள் மட்டுமே மும்பையில் இருந்தார்.

அவர் என்னுடன், என் குடும்பத்துடன் இருந்தார். அவர் தனது தொழில், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பாந்த்ரா வாழ்க்கை முறையை முற்றிலுமாக கைவிட்டு, சென்னையில் இருந்தார்.

27 வருடங்களுக்குப் பிறகு தன் பெற்றோருடன் மும்பையில் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கிறார். ஆண்களை போல் பெண்களுக்கும் சில விஷயங்கள் தேவை.

ஆண்களை போல் பெண்களுக்கும் தேவைப்படும்

நான் இது பற்றி தாமதமாக உணர்ந்துள்ளேன். அவளுக்கு அந்த விடுமுறைகள். அவருக்கு நண்பர்கள் மற்றும் பொருளாதார சுதந்திரம் தேவை. அது மட்டுமல்லாமல் நாம் (ஆண்கள்) எதை விரும்புகிறோமோ, அது பெண்களுக்கும் தேவை. அவர்களுடைய பெற்றோர், வாழ்க்கை முறை மற்றும் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

இந்த மாற்றத்தை எப்போது செய்யப் போகிறோம்? எனவே அவர் மும்பையில் இருப்பதற்கானநடவடிக்கையின் பின்னணியில் உள்ள சிந்தனை இதுதான். ஒரு நடிகராக அவரது அந்த வளர்ச்சியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

கங்குவா ரிலீஸ்

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படமான கங்குவா வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியாகும் படமாக கங்குவா இருப்பதால் படம் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த படத்தில் பாலிவுட் இளம் ஹீரோயின் திஷா பதானி, பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ் தவிர உலக அளவில் 38 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

படத்தின் இசை வெளியீடு கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில், விரைவில் படத்தின் புதிய ட்ரெயலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா புதிய படம்

சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 44 என்று அழைக்கப்படும் இந்த படம் ரொமாண்டிக் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிறது. படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.