விருச்சிகத்தில் பெயரப்போகும் புதன்.. அதீத செலவுகள், உடல் நலம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய 3 ராசிகள்
Oct 28, 2024, 05:33 PM IST
விருச்சிகத்தில் பெயரப்போகும் புதன்.. அதீத செலவுகள், உடல் நலம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய 3 ராசிகள் குறித்துக் காண்போம்.
ஜோதிடத்தின்படி, புதன் பகவான் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம். இது ஞானம், புத்திசாலித்தனம், பேச்சு போன்றவற்றிற்கு காரணமாக இருப்பதாகக் கருதப்படுகிறார். தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வரும் புதன் பகவான், அக்டோபர் 29 முதல் அக்டோபர் 29 முதல் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கப்போகிறார்.
சமீபத்திய புகைப்படம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். புதன் பகவானுக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை குணம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, விருச்சிகத்தில் புதனின் நிலை எதிர்மறையான விளைவுகளையே அதிகம் தருகிறது. சில கிரகங்களின் நகர்வுகள் துயரத்தையும் வீழ்ச்சியையும் உருவாக்கலாம்.
இது சில ராசியினருக்குக் கடினமான சூழ்நிலைகளை உருவாக்கலாம். புதனின் இயக்கத்தால் எந்தெந்த ராசியினர் சிரமத்தைச் சந்திக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
விருச்சிகத்தில் புதனின் சேர்க்கையால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்:
மேஷம்: மேஷ ராசியின் எட்டாம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இது மேஷ ராசியினருக்கு உடல் நலக்குறைபாட்டுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மோசமடையலாம். பேசக்கூடிய தகவல் தொடர்பு திறன் பாதிக்கப்படலாம். உங்கள் பேச்சு பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம். கடந்த கால உடல்நலப் பிரச்னைகள் மீண்டும் எழுவதற்கான வாய்ப்பு உள்ளது. தோல் பிரச்னைகள் மற்றும் தொண்டை தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். சில திடீர் நிகழ்வுகள் மன அமைதியின்மையை ஏற்படுத்தும்.
மிதுனம்:
விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிப்பதால், மிதுன ராசியினரின் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கும். ஆரோக்கியப் பிரச்னைகள் காரணமாக மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். தொழில், வேலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வேலையில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் அதிக அழுத்தம் இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத நஷ்டங்களும் அதிக செலவுகளும் ஏற்படும். எனவே, எந்த முக்கியமான விஷயத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது.
தனுசு:
விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி என்பது தனுசு ராசியினருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பன்னிரெண்டாம் வீட்டில் புதன் பெயர்ச்சி தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள பல தடைகள், பின்னடைவுகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும், ஆனால் அதற்கு மேல் செலவுகள் இருக்கும். கடந்த காலத்தில் செய்த சேமிப்பையும் செலவழிக்க வேண்டியிருக்கும். மருத்துவப் பிரச்னைகள் மோசமடையும். இல்லையெனில், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரங்கள்: புதன் பெயர்ச்சியால் ஏற்படும் பாதகமான நிலைமைகளில் இருந்து விடுபட சில பரிகாரங்களை பின்பற்றுவது நல்லது. திருநங்கைகளை மதிக்க வேண்டும், விஷ்ணு சகஸ்கரநாமத்தை தினமும் பாராயணம் செய்து ஆசீர்வாதம் பெற வேண்டும். கோழிகளுக்கு கீரைகளை உணவாக வழங்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்