சத்து நிறைந்த திணை; ஆரோக்கியம் அதிகரிக்க ஆப்பம் செய்து சாப்பிட சுவை அள்ளும்! இதோ ரெசிபி!
சத்து நிறைந்த திணையில் ஆரோக்கியம் அதிகரிக்க என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசித்தால், ஆப்பம் செய்து சாப்பிட சுவை அள்ளும், இதோ ரெசிபி. சாப்பிட்டு மகிழுங்கள்.
திணையின் நன்மைகளும், அதில் உள்ள சத்துக்களும்,
100 கிராம் திணையில் 331 கலோரிகள் உள்ளது. இதில் புரதச்சத்து 12.3 கிராம், நார்ச்சத்து 8 கிராம், கொழுப்பு 4.3 கிராம், பாஸ்பரஸ் 290 மில்லி கிராம், பொட்டாசியம் 250 மில்லி கிராம், மெக்னீசியம் 81 மில்லி கிராம், வைட்டமின் ஏ 32 மில்லி கிராம், ஃபோலிக் ஆசிட் 15 மில்லி கிராம், சோடியம் 4.6 மில்லி கிராம், நியாசின் 3.2 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.8 மில்லி கிராம், துத்தநாகச்சத்து 2.4 மில்லி கிராம் இருந்தது. திணையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. குளுக்கோஸை குறைக்கும் தன்மை உள்ளது. வாயுவை காக்கும் தன்மை உள்ளது. பூஞ்ஜை தொற்று தடுக்கும் தன்மைகள் நிறைந்தது. நிரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் குறைவான கிளைசமிக் அளவுகள், கணைய செல்களை இன்சுலின் தயாரிக்க தூண்டுகிறது. இந்த ஹார்மோன் ரத்தச்சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
ரத்த சர்க்கரை உயர்வதை குறைக்க உதவுகிறது. இன்சுலினுக்கு உடல் செல்களின் பங்களிப்பை அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்சுலின்தான் ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதனால் திணையை உட்கொள்வது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது. பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிறது. பூஞ்ஜை தொற்று ஏற்படுவதை தடுக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்குகிறது. திணையில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உருவாக உதவுகிறது. இது இரும்பு பற்றாக்குறையை போக்கி, அனீமியாவை போக்குகிறது. நார்ச்சத்து பித்தப்பை கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. பித்தம் அதிகம் சுரப்பதையும் தடுக்கிறது. பித்த கொழுப்பையும் குறைக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.
தேவையான பொருட்கள்
திணை – 2 கப்
இட்லி அரிசி – கால் கப்
வெள்ளை உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
தேங்காய்ப் துருவல் – ஒரு கப்
வடித்த சாதம் – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் திணை, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் என அனைத்தையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். அதனுடன், தேங்காய் பூ சிறிதளவு, வடித்த சாதம் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கலந்து ஓரிரவு அல்லது 8 மணி நேரம் நன்றாக புளிக்கவைக்கவேண்டும். புளித்து பொங்கி வந்த மாவை இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலந்துகொள்ளவேண்டும். மாவு பஞ்சுபோல் இருக்கவேண்டும்.
ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானவுடன், தேவையான அளவு மாவை ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவேண்டும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போல் வார்த்து எடுக்கவேண்டும்.
சத்தும், சுவையும் நிறைந்த திணை ஆப்பம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ப் பால், வெஜிடபிள் ஸ்ட்டூ, பாயா, காய்கறி குருமா, கறி, சிக்கன் குழம்பு என எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்