தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rn Ravi: பிள்ளையார்பட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்!

RN Ravi: பிள்ளையார்பட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 23, 2023 11:48 AM IST

அலங்கார மண்டபத்தில் சங்கல்ப நிகழ்ச்சியை தொடர்ந்து கவர்னருக்கு நினைவு பரிசாக ஸ்ரீ கற்பக விநாயகர் திருவுருவப்படம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி

ட்ரெண்டிங் செய்திகள்

ஆலயத்திற்கு வந்த ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன், காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்பு கோவில் அறங்காவலர்கள் பூர்ண கும்ப மரியாதை உடன் வரவேற்பு அளித்தனர். அதனைதொடர்ந்து கவர்னருக்கு சங்கல்பம் செய்யப்பட்டது. பின்பு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு தீபாராதனையுடன் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்பு அலங்கார மண்டபத்தில் சங்கல்ப நிகழ்ச்சியை தொடர்ந்து கவர்னருக்கு நினைவு பரிசாக ஸ்ரீ கற்பக விநாயகர் திருவுருவப்படம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து காரைக்குடியில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பரின் ஆருங்காட்சியத்தை பார்வையிட்டு வள்ளல் அழகப்பரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகங்களும்,அவர் பயன்படுத்திய பொருட்களையும் பார்வையிட்டு அருங்காட்சியகத்தில் உள்ள வள்ளல் அழகப்பர் திருஉருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரிய கலாச்சார பண்பாட்டுப் பொருட்களையும், பார்வைவிட்டார்.

காரைக்குடி அழகப்பா பல்கலை கழக 33-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது .தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்று 1124 மாணவர்களுக்கு பட்டங்களை நேரடியாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் மத்திய கல்வி திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பட்டமளிப்பு விழா உரையில் தேசிய கல்வி மற்றும் ஆராய்சி பயிற்சி குழுமம் பாட புத்தகங்கள் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி வெளியிடபடும் என்றார் தேசிய கல்வி கொள்கை தாய் மொழியில் கல்வி கற்பிப்பது குறித்தே பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்.

அனைத்து இந்திய மொழியும் தேசிய மொழி தான். தமிழ் மொழி பழமை வாய்ந்து தேசிய கல்வி கொள்கையில் இந்திய கல்வி வேலைவாய்ப்புக்கும் , அறிவியல் தொழில் நுட்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மொபைல் தொழில் நுட்பத்தில் வெளிநாடு சார்ந்திருந்த நிலையில் சென்னை ஐ.ஐ டி 5 ஜி தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தாய் மொழி கல்விக்கு தான் முக்கியத்துவம் மற்ற மொழிகளை திணிக்கவில்லை. தாய் மொழியில் கல்வி கற்பது எளிது,’’

என்று பேசினார்

IPL_Entry_Point

டாபிக்ஸ்