தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஈபிஎஸை சந்திப்பேன்!’ உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

’நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஈபிஎஸை சந்திப்பேன்!’ உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

Kathiravan V HT Tamil
Nov 03, 2023 11:57 AM IST

”திமுகவில் இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் உள்ளது. அதே போல் பாஜகவில் உள்ள ஒரு அணிதான் ஐடி அணி”

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நீட் விலக்கு நமது இலக்கு என்ற பெயரில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் தொடங்கினோம்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். அதை ஆளுநர் கையெழுத்து போடாமல் வைத்திருந்தார். தற்போது ஜனாதிபதியின் கையெழுத்துக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.

6 ஆண்டுகளில் நீட் தேர்வு காரணமாக 22 குழந்தைகள் இறந்துள்ளார்கள். திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னோம். உண்மையாக அதற்கான நடவடிக்கைக்களை எடுத்து வருகிறோம். இந்த 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற்று திமுக இளைஞரணி மாநாட்டில் தலைவரிடம் ஒப்படைத்த பிறகு குடியரசுத்தலைவரிடம் இந்த கையெழுத்துக்களை அனுப்புவதுதான் எங்களின் இலக்கு.

www.BanNeet.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 3 லட்சம் கையெழுத்துக்களை பெற்றுள்ளோம். போட் கார்டுகள் மூலம் இதுவரை 8 லட்சம் கையெழுத்துக்களை பெற்றுள்ளோம்.

இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்காக வந்துள்ளேன்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து கையெழுத்து வாங்க உள்ளேன். அனைத்து இயக்க தலைவர்களையும் சந்தித்து நீட் தேர்வுக்கு கையெழுத்திட வேண்டும் என கேட்க உள்ளேன் என்றார். அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, ஆம் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து நீட் விலக்குக்கு கையெழுத்து பெற திட்டமிட்டுள்ளேன் என கூறி உள்ளார். 

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் ஐடி ரெய்டுகள் குறித்த கேள்விக்கு, திமுகவில் இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் உள்ளது. அதே போல் பாஜகவில் உள்ள ஒரு அணிதான் ஐடி அணி, அமலாக்கத்துறை உள்ளிட்டவை. அவர்கள் அவர்களது பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள், இதை சட்டப்படி சந்திப்போம். கடந்த மூன்று மாதகாலமாக அவர்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது.

IPL_Entry_Point