தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  List Of Drinks For Summer To Get Rid Of Body Heat, Dehydration

Summer Drinks: தொடங்கிய கோடை காலம்! சுட்டெரிக்கும் வெயிலை சமாளித்து உடல் உஷ்ணத்தை போக்க பருக வேண்டிய பானங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 17, 2024 05:59 PM IST

கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்கவும், தாகத்தை போக்கிடவும் வீட்டிலேயே தயார் செய்து பருக வேண்டிய பானங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த பானங்கள் உடலையும் நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவுகின்றன.

கோடை காலத்தில் பருக வேண்டிய பானங்கள்
கோடை காலத்தில் பருக வேண்டிய பானங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

அத்துடன் சில ஜூஸ் வகைகள், பானங்களை பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைத்து ரிலாக்சாக உணரலாம். உடலையும் நீர் இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். அந்த வகையில் கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர்சத்து கொண்ட சாறுகள், பானங்கள், ஜூஸ்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

கோடை காலத்தில் தவறாமல் பருக வேண்டிய பானங்களாக பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்திய பானங்களும் அதை தயார் செய்வது எப்படிஎன்பையும் பார்க்கலாம் சில இதோ

நீர் மோர்

அரைகப் தயிரில், துருவிய இஞ்சி,பச்சை மிளகாய், வறுத்து பொடித்த சீரகம், உப்பு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றுடன் சிறிது அளவு நீர் சேர்த்து, ஸ்பூன் வைத்து குலுக்கி தண்ணீர் போல் ஆக்கி பருக வேண்டும். வெயில் தாக்கத்தில் இருந்து உடனடியாக விடுபட சிறந்த பானமாக இது உள்ளது.

இந்த நீர் மோரை ஒரு பானையில் ஊற்றி வைத்தால் தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீருக்கு பதிலாக இதை அருந்தலாம். நீர் மோர் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சி ஆக்குவதுடன், செரிமான பிரச்னை, வயிறு உப்புசத்தை குறைக்கிறது

புதினா லஸ்ஸி

ஒரு கப் தயிரில், பொடியாக நறுக்கிய புதினா இலைகள், சீரகம் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். குளிர்ச்சியாக குடிக்க விரும்புவோர் ஐஸ்கட்டிகளை சேர்க்கலாம். தேவைப்பட்டால் உப்பு சுவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளாம்.

புதினாவில் இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு புத்துணர்ச்சியும் தரும் தன்மை உள்ளது. எனவே புதினா லஸ்ஸி குடிப்பதால் வெயில் காலத்தில் உடல் ஆற்றலை மீட்டெடுக்கலாம்

பானகம்

பொடியாக்கிய வெல்லம், எலுமிச்சை பழ சாறு, சுக்கு பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றுடன் சிறிது அளவு துளிச இலைகள் ஆகியவற்றை சேர்த்து பானகத்தை தயார் செய்யலாம். இதில் சேர்க்கப்படும் அனைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதாகவும், செரிமான பிரச்னைகளை போக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. அத்துடன் உடலை நீரேற்றமாகவும், ஆற்றலுடனும் வைக்க உதவுகிறது

வெட்டிவேர் ஜூஸ்

உடலின் உஷ்ணத்தை குறைக்கும் வெட்டிவேர் தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும் வல்லமை கொண்டுள்ளது.

இரண்டு டம்ளர் தண்ணீரில் வெட்டிவேரை போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அது நன்கு ஆறிய பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி தேன் கலக்க வேண்டும். அவ்வவுதான் சுவையான வெட்டிவேர் ஜூஸ் ரெடி. இது குளிரவைத்தும் பருகலாம்.

வெட்டிவேருக்கு தண்ணீரை தூய்மைப்படுத்தும் திறன் உள்ளது. இது ஆன்டிபயோடிக் போல் செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, மனதையும் அமைதிப்படுத்தும் தன்மை வெட்டிவேருக்கு உள்ளது.

இதுதவிர சப்ஜா விதை ரோஸ் மில்க், நெல்லிக்காய் ஜூஸ், தர்ப்பூசணி சாலட், நன்னாரி ஜூஸ், ஆப்பிள் பீட்ருட் கேரட் கலந்த ஏபிசி ஜூஸ், மசாலா மாங்காய் ஜூஸ் போன்ற பல பானங்களை கோடியின் வெப்பத்தில் இருந்து தாக்குப்பிடிக்கு பருகலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்