தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Udhayanidhi Stalin: ‘உதயநிதி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்’ வாக்குபதிவு முடிந்த நேரத்தில் காங்கிரஸ் முதல்வர் தடாலடி

Udhayanidhi Stalin: ‘உதயநிதி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்’ வாக்குபதிவு முடிந்த நேரத்தில் காங்கிரஸ் முதல்வர் தடாலடி

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 20, 2024 09:25 AM IST

Udhayanidhi Stalin: மக்களவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ரேவந்த் ரெட்டி, கூறியதாவது, “ சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து மிகவும் தவறானது அது அவருடைய சிந்தனை. சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்கு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘உதயநிதி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்’ வாக்குபதிவு முடிந்த நேரத்தில் காங்கிரஸ் முதல்வர் தடாலடி
‘உதயநிதி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்’ வாக்குபதிவு முடிந்த நேரத்தில் காங்கிரஸ் முதல்வர் தடாலடி

ட்ரெண்டிங் செய்திகள்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத் தேர்தல்கள் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 

இந்நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலின். இவர் சனாதனம் குறித்து பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ரேவந்த் ரெட்டி, கூறியதாவது, “ சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து மிகவும் தவறானது அது அவருடைய சிந்தனை. சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்கு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று மக்களவை பொதுத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் கூறிய கருத்து இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற குழப்பம் எழுந்துள்ளது. 

முன்னதாக கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார்.

பாஜகவினர் எதிர்ப்பு

சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் தேசிய அளவில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்

பாஜகவினரின் கண்டனத்திற்கு பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ”ஒட்டுமொத்த இந்தியாவும் சனாதனம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது. Genocide (இன அழிப்பு) என நான் சொன்னதாக சிலர் கூறுகிறார்கள். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசினேன். இனிமேலும் அப்படிதான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன். என தெரிவித்திருந்தார் என்றபது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point