தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திருச்சி தாக்குதல்: சரணடைந்த 4 திமுக நிர்வாகிகள் கைது

திருச்சி தாக்குதல்: சரணடைந்த 4 திமுக நிர்வாகிகள் கைது

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 15, 2023 05:47 PM IST

சரணடைந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி எம்.பி சிவா
திருச்சி எம்.பி சிவா

ட்ரெண்டிங் செய்திகள்

திருச்சி சிவா எம்.பி அமைச்சர் கே.என் நேரு ஆதரவாளர்கள் மோதல் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

“திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட 4 பேரும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4 பேர் சரண் அடைந்துள்ளனர். சரணடைந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதற்காக அமைச்சர் நேரு இன்று அங்கு வந்திருந்தார். அந்த வகையில் திருச்சி எம்.பி சிவா வசிக்கும் ராஜா காலனி அருகே உள்ள மைதானத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் அந்த இடத்தில் எம்.பி சிவா புகைப்படம் இல்லை எனக்கூறி அவரின் ஆதரவாளர்கள் நேருவின் காரை கருப்புக்கொடி காட்டி முற்றுகையிட முயன்றதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அங்கிருந்த திமுகவினர் திருச்சி எம்.பி சிவாவின் வீட்டின் கண்ணாடி, கார் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த நாற்காலிகளையும் சேதப்படுத்தினர். இந்த அசாம்பிவித சம்பவத்தில் ஈடுபட்டது நேருவின் ஆதரவாளர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன

IPL_Entry_Point

டாபிக்ஸ்