தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tnpsc Group 4 Practice Series And Tips For Tnpsc Group 4 Exam And Part 5

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி ஐந்து

Marimuthu M HT Tamil
Mar 24, 2024 10:01 AM IST

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!

TNPSC Group 4
TNPSC Group 4

ட்ரெண்டிங் செய்திகள்

நிதித்திறன்: ஒரு அரசுடைய திறனுக்கு ஏற்ப வரிகளை ஏற்றுவது, அதன் ‘நிதித்திறன்’ என்றழைக்கப்படுகிறது. 

வருமான வரி: இந்தியாவில்  முதன்முதலாக வருமான வரி 1860ஆம் ஆண்டு, சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு, கலகத்தின்மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம், போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும். 

1954ஆம் ஆண்டு, முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும். 1970-80களில் பல ஐரோப்பிய நாடுகள் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அறிமுகப்படுத்தின.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு:(GST):

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி(IGST): மாநிலங்களுக்கு இடையேயானது. 

மாநிலப் பண்டங்கள் மற்றும் பணிகள் வரி(SGST) - மாநிலத்திற்குள்: மதிப்புக் கூட்டுவரி(VAT)/ விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி(CGST):மாநிலத்திற்குள்: மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்விக் கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி)

ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம்(தொடங்கப்பட்டது: ஜனவரி 16,2016): ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின்  ஒரு முன் முயற்சித் திட்டமாகும். இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான  தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் அதுசார்ந்த வளங்களை உண்டாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. 

ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டம்(தொடங்கப்பட்டது: ஏப்ரல் 5, 2016): ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி(Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும் 1 கோடிக்கும் இடையில் , ஒரு பட்டியல் சாதியினர் அல்லது ஒரு பழங்குடி சாதியினர் மற்றும் ஒரு வங்கிக்கிளைக்கு ஒரு பெண் ஆகியோர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதாகும். 

 • இம்பீரியல் வங்கி என்பது பாரத ஸ்டேட் வங்கி ஆகும். 
 • தற்போதைய இந்தியப் பொருளாதாரம் என்பது ‘வளர்ந்து வரும் பொருளாதாரம்’ என அழைக்கப்படுகிறது. 
 • தமிழ்நாட்டில் 2010-11இல் அதிக தலா வருவாயுடைய மாவட்டம் என்பது கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். 
 • வெண்மைப் புரட்சிக்குக் காரணமானவர், டாக்டர் வெர்கீஸ் குரியன்.
 • பாரத் நிர்மாண் திட்டத்தின் நோக்கம் என்பது, கிராம மக்களுக்கு அடிப்படை வசதிசெய்தி தருவது.
 • தேசிய துறைமுக வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு, 1950 ஆகும்.
 • பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு, 2006 ஆகும்.
 • சுகம்யா பாரத்  அபியான் என்னும் திட்டத்தின் நோக்கம், மாற்றுத் திறனாளிகளின் அணுகுதலுக்கு ஒவ்வாத கட்டடங்களுக்கு அபராதம் விதித்தல் ஆகும்.
 • நான்கு உற்பத்திக் காரணிகள் என அழைக்கப்படுவது, நிலம் - உழைப்பு - மூலதனம் - தொழில் முனைவோர் ஆகிய நான்கு சேர்ந்தது.
 • தீன் தயாள் உபத்யாயா கிராம ஜோதி யோஜனா இந்தியாவில் கிராம மேம்பாடுக்காக கொண்டு வரப்பட்டது. 
 • ஜவஹர் கிராம சம்ரித்தி யோஜனா என்ற திட்டம், வறுமையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்