TNPSC Group 4:டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 2!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc Group 4:டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 2!

TNPSC Group 4:டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 2!

Marimuthu M HT Tamil
Mar 18, 2024 07:40 AM IST

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை இன்று முதல் தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!

TNPSC Group 4 பயிற்சித் தொடர்: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 2
TNPSC Group 4 பயிற்சித் தொடர்: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 2

பூமியின் சுழற்சி வேகம்: பூமியின் சுழற்சி வேகம், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி.மீ/ மணி ஆகவும்; 60 டிகிரி வடக்கு அட்சரேகையில் 845 கி.மீ./மணி ஆகவும், துருவப் பகுதியில் ஜீரோவாகவும் உள்ளது.

மங்கள்யான்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும்(ISRO), செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதியை ஆராய்வதற்காக 24.09.2014அன்று 'மங்கள்யான்’(Mars Orbiter Mission)எனப்படும் விண்கலத்தை அனுப்பியது.

ஆகையால், செவ்வாய்க்கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், இரண்டாமிடத்தில் அமெரிக்காவின் நாஸா நிறுவனமும்,  மூன்றாமிடம் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் பங்கு வகிக்கிறது.

தரை ஊர்தி: விண்பொருட்களை ஆராய, விண்பொருட்களில் இறங்கி அதன் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும் ஊர்தி.

சுற்றி வரும் கலங்கள்: விண்பொருட்களின் மீது இறங்காமல் அதனைச் சுற்றி வரும் கலம்.

அப்பல்லோ 2: அப்பல்லோ 2 விண்கலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாஸாவால், மனிதர்களுடன் நிலாவுக்கு ஏற்றிச் சென்ற விண்கலமாகும். இது நிலவில் 1969ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று, நீரில்லாத அமைதிக்கடலில் (Sea of Tranquility) கால் வைத்தது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய இருவர் பயணித்தனர். இதில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன்முறையாகத் தன் காலடி தடத்தைப் பதித்தார். அங்கு அவர்கள், 21 மணி நேரம் 38 நிமிடங்கள் மற்றும் 21 நொடிகள் இருந்தனர்.

ஹேலி வால்நட்சத்திரம் என்றால் என்ன?: ஹேலி வால் நட்சத்திரம்  என்பது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும். இறுதியாக, இந்த ஹேலி வால் நட்சத்திரம் 1986ஆம் ஆண்டு பூமியில் தென்பட்டது. அது மீண்டும் இந்தியாவில் 2061ஆம் ஆண்டு தென்படும். 

நிலாவைப் பற்றி ஆராய இந்தியா எடுத்த முயற்சி என்ன?: நிலாவைப் பற்றி ஆராய, இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட முதல் விண்கலம், சந்திரயான் 1 ஆகும். அது 2008ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. 

நிலச்சந்தி: இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடிய பரப்பு, நிலச்சந்தி அல்லது இரண்டு பெரிய நீர்ப் பரப்பினை பிரிக்கக் கூடியதுமான, மிகக் குறுகிய நிலப்பகுதி ‘நிலச்சந்தி’ எனப்படுகிறது.

ஐந்து பெருங்கடல்கள்: பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டலாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் என ஐந்து பெருங்கடல்கள் உள்ளன. இதில் பசிபிக் பெருங்கடல் மிகப்பெரியது. ஒரு பக்கம் ஜப்பானில் இருந்து ஆஸ்திரேலியா வரையும் மறுபக்கம் கனடாவில் இருந்து தென் அமெரிக்க கண்டம் வரை பரவியுள்ளது. மேற்கு பகுதியில் ஆப்ரிக்காவாலும், வடக்குப்பகுதியில் இந்தியாவாலும், கிழக்குப் பகுதியில் ஆஸ்திரேலியாவாலும் சூழ்ந்துள்ளது, இந்தியன் பெருங்கடல். அட்லாண்டிக் பெருங்கடல், இடதுபக்கம் வட அமெரிக்க கண்டமும் வலது பக்கம் ஐரோப்பிய கண்டத்துக்கும் இடையில் இருக்கும் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகும். ஆர்டிக் பெருங்கடல், வடக்கு துருவப்பகுதியில் அமைந்துள்ளது. அண்டார்டிகா பெருங்கடல் பூமியின் தென் துருவப்பகுதியில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4 பயிற்சித் தொடர்: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 1!

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.