TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 3!
TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!
TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக, நடத்தப்படும் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்குப், பலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பொருளியல் பகுதியில் சராசரியாக 7 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பொருளியல் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் இன்றும் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.
இந்தியாவில் இருக்கும் பொருளாதார நிலை: இந்தியாவில் கலப்பு பொருளாதார நிலை காணப்படுகிறது. அதன்படி, தனியார் நிறுவனங்களும் அரசுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக செயல்பட்டு, கலப்பு பொருளாதார நிலையை அடைவர்.
பணத்தின் ரூபாய் குறியீடு: இந்திய ரூபாய் குறியீடு என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உதயகுமார் என்பவரால் டிசைன் செய்யப்பட்டது. இதனை 2010ஆம் ஆண்டு, ஜூலை 15ஆம் தேதி இந்திய அரசு அங்கீகரித்தது.
அதிக ஊழியர்கள் கொண்ட பொதுத்துறை நிறுவனம்: இந்தியாவில் பெருமளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம், ரயில்வே துறை நிறுவனமாகும்.
பணமதிப்பிழப்பு: 2016ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி, இந்திய அரசு கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையாக, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை பணமதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது.
ஜிடிபி என்றால் என்ன? ஓர் ஆண்டில் புவியியல் எல்லைக்குட்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்பினை, ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என்பர்.
யார் இந்த அமர்த்தியா சென்?: ‘An Uncertain Glory’ என்ற நூலை எழுதியவர், நோபல் பரிசு வென்ற பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென் ஆவார். இந்த நூலில் தமிழ்நாடு, கேரளா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் வளர்ச்சியில் சீர்தன்மை, ஒத்தப்போக்கு நிறைய காணப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.
நாட்டு வருமானம்: ஒரு நாட்டில் ஓராண்டு காலத்தில், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகளுக்கான மொத்த பணமதிப்பு, நாட்டு வருமானம் ஆகும்.
நிகர நாட்டு வருமானம்: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானச் செலவைக் கழித்தபின் கிடைக்கும் பணமதிப்பு ஆகும்.
நிகர நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானச் செலவு
வேலைவாய்ப்பு மையம் அமைத்த மன்னர்: டெல்லி சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக், வேலைவாய்ப்பின்மையைப் போக்குவதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
ரூபியா: ஷெர்ஷா சூரி இவர் கி.பி.1540ஆம் ஆண்டு முதல் 1546ஆம் ஆண்டு வரை, அரசு ஆளும்போது, 178 கிராம் எடைகொண்ட வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்தினார். அதன்பெயர் ‘ரூபியா’எனப்பட்டது. அந்த நாணயம் முகாலயர், மராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை புழக்கத்தில் இருந்தது.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதாரணங்கள்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்திய உருக்கு ஆணையம், பி.எஸ்.என்.எல் ஆகியவை இந்திய அரசின் நிறுவனங்களாகும்.
ஆர்.பி.ஐ-யின் அடிப்படைச் சட்டம்:
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் ‘பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் தான், இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம், 1934ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
காவிரி ஆறு: இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு, காவிரி ஆகும். இது சுமார் 765 கி.மீ. நீளம் கொண்டது. ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மற்றும் கல்லணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
டாபிக்ஸ்