TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 4!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 4!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 4!

Marimuthu M HT Tamil
Mar 20, 2024 09:33 AM IST

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகளை தொடராக வெளியிடுகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.. எனவே, தொடர்ந்து படியுங்கள்.. தேர்வில் வெல்லுங்கள்!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பயிற்சித் தொடர் - பகுதி 4
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பயிற்சித் தொடர் - பகுதி 4

இந்நிலையில் பொருளியல் பகுதியில் சராசரியாக 7 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பொருளியல் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் இன்றும் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி ஆகும். 

இடம்பெயர்வாளர்கள்: வெளிநாடுகளில் குறிப்பிட்ட கால அளவிற்கு, அங்கு தங்கிப் பணிபுரிந்து மீண்டும் தாயகம் திரும்புபவர்கள், இடம்பெயர்வாளர்கள் ஆவர்.

அயல்நாடுகளில் குடியேறுபவர்கள்:  பிறந்த நாடு ஒன்றாக இருந்தாலும், வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்பவர்கள், அயல்நாடுகளில் குடியேறுபவர்கள் ஆவர். 

GDP-யின் மதிப்பீடு: புள்ளியியல் துறை அமைச்சரவையின் கீழேயுள்ள, மத்திய புள்ளியியல் அமைப்பு(CSO- Central Statistics Office), GDP - (Gross Domestic Product)  சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பாதுகாக்கிறது. தொழில் துறையின் உற்பத்தியை ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி, தொழில்துறை உற்பத்திக் குறியீடு(IIP - Index of Industrial Production), நுகர்வோர் விலை குறியீடு(CPI - Consumer Price Index) போன்ற குறியீடுகளை வெளியிடுகிறது. 

G7 நாடுகள்: கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய அரசு(United Kingdom), அமெரிக்க ஐக்கிய நாடுகள்(USA) ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய நாடு, ஜி 7 நாடுகள் என அழைக்கப்படுகிறது.

GATT(General Agreement on Trade Tariff): GATT-ன் முக்கிய நோக்கம், பயனுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பலவிதமான கட்டணங்களையும், ஒதுக்கீடுகளையும், மானியங்களையும் குறைப்பதன் மூலம், சர்வதேச வர்த்தகத்தை அதிகரித்தல் ஆகும். 

பயோமெட்ரிக் குடும்ப அட்டை(Bio Metric Smart Family Cards): குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் தமிழ்நாடு அரசால் தரப்படுகின்றன. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின்படி, தனித்துவமான அடையாள எண்(UIN) பதிவேட்டில், பதியப்பட்ட பின்பு, அதனுடைய தரவுகள் அடங்கிய பயோமெட்ரிக் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்க முன்மொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தனிப்பட்ட அடையாளத்தைக் கொண்டிருப்பதால், உறுப்பினர்களின் தரவு நகல் மற்றும் போலி அட்டைகளை அகற்றமுடியும்.

தமிழ்நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்: இந்தியாவில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தொடங்கி, மூன்று ஆண்டுகளுக்கு முன், நவம்பர் 1,2016அன்று இச்சட்டம், இந்தியாவிலேயே இறுதி மாநிலமாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. மேலும் இச்சட்டத்தை மாற்றியமைக்கும் தமிழ்நாடு அரசு மாற்றியமைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தாங்கியிருப்பு(Buffer Stock):

  • உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில், விவசாயிகளிடமிருந்து அரிசி மற்றும் கோதுமையை, இந்திய உணவுக் கழகத்தின்(FCI-Food Corporation of India)மூலம், அரசாங்கம் வாங்கி, சேமித்து வைக்கிறது. இம்முறை ‘தாங்கியிருப்பு’எனப்படுகிறது. 
  • தாங்கியிருப்பின் மூலமாக, உணவு தானியங்கள் சமூகத்தின் ஏழ்மையான பிரிவினருக்கு சந்தை விலையை விட, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்விலையானது ‘வெளியீட்டு விலை’ என அழைக்கப்படுகிறது.
  • சாதகமற்ற வானிலை காலங்களில், உணவுப் பற்றாக்குறைப் பிரச்னைகளைத் தீர்க்க, தாங்கியிருப்புமுறை உதவுகிறது. 
  •  இந்தியாவில் மனித வளமேம்பாட்டு அமைச்சகம், இந்திய மனித வளங்களின் வளர்ச்சிக்குப் பொறுப்பாகும். இதன் தலைமையகம், டெல்லி சாஸ்திரி பவனில் அமைந்துள்ளது.  

இதையும் படியுங்கள்: TNPSC Group 4 பயிற்சித் தொடர்: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 1!

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.