தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tmc Chief Talk About Alliance With Bjp

TMC vs BJP: 'இதை செய்த பின்புதான் தொகுதி பங்கீடு' - ஜி.கே.வாசன் வைக்கும் செக்!

Karthikeyan S HT Tamil
Mar 02, 2024 03:02 PM IST

பாஜக - தமாகா இடையே இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அண்ணாமலை, ஜி.கே.வாசன்
அண்ணாமலை, ஜி.கே.வாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், "தமிழ் மாநில காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும். பாஜக - தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல், களப்பணி, வெற்றி வியூகம் தொடர்பாக இந்த சந்திப்பில் பொதுவாக பேசினோம்.

குறிப்பாக தமாகா தேர்தல் குழு அமைத்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும். மார்ச் 4 முதல் 6 வரை தமாகா விருப்ப மனு பெறவிருக்கிறது. அதன்பின் பாஜக குழு தமாகா உடன் பேச்சுவார்த்தையை தொடங்கும். நாட்டு நலன் கருதி மத்தியில் நல்லாட்சி அமைய தேசப்பற்றோடு கூடிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று தமாகா கேட்டுக்கொள்கிறது.

மாநில கட்சிகள் நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சியாக செயல்படக்கூடிய முக்கிய தருணம் இது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட்டு நல்ல முடிவை நாட்டு நலன் கருதி எடுக்க வேண்டும்.

அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ளது. அந்த கூட்டணியின் கருத்து வேறுபாடும், திறனற்ற செயல்பாடும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை குறைத்துக்கொண்டு போகிறது. தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது." எனத் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்