தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி! முடிகிறதா ஓபிஎஸின் அரசியல் வாழ்க்கை?

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி! முடிகிறதா ஓபிஎஸின் அரசியல் வாழ்க்கை?

Kathiravan V HT Tamil
Feb 23, 2023 11:34 AM IST

இத்தீர்ப்பின் மூலம் அதிமுகவுக்கு உரிமை கோறும் ஓ.பன்னீர் செல்வத்தின் முயற்சிக்கு முழுமையாக உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்

ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று அறிவித்த தீர்மானம் மாற்றப்பட்டு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான ஈபிஎஸ்
ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான ஈபிஎஸ்

மேலும் அதிமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக அப்பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 11 பொதுக்குழுவின் முடிவுகளுக்கு தடைவிதிக்க கோரியே ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த தனிநீதிபதி ஜெயச்சந்திரன், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த பொதுக்குழுவின் முடிவுக்கு தடை விதித்தார்.

<p>சென்னை உயர்நீதிமன்றம்</p>
சென்னை உயர்நீதிமன்றம்

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் (HT_PRINT)

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்த வழக்கில்தான் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பளித்துள்ளனர். அவர்கள் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு செல்லும் என அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செல்லும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இத்தீர்ப்பின் மூலம் அதிமுகவுக்கு உரிமை கோறும் ஓ.பன்னீர் செல்வத்தின் முயற்சிக்கு முழுமையாக உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்

IPL_Entry_Point

டாபிக்ஸ்