தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rip Sankaraiah: ’மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்! விடுதலை போராட்ட வீரர்! சங்கரய்யா காலமானார்! அவருக்கு வயது 102!’

RIP Sankaraiah: ’மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்! விடுதலை போராட்ட வீரர்! சங்கரய்யா காலமானார்! அவருக்கு வயது 102!’

Kathiravan V HT Tamil
Nov 15, 2023 10:28 AM IST

”சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது”

சங்கரய்யா
சங்கரய்யா

ட்ரெண்டிங் செய்திகள்

விடுதலை போராட்ட வீரர், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவர் உள்ளிட்ட பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான சங்கரய்யா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் மக்கள் பணி ஆற்றி உள்ளார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும் பின்னர் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் 1921ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்த சங்கராய்யா, மதுரை அமெரிக்கன்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு போராட தொடங்கினார். இதனால் 1941ஆம் ஆண்டில் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டார்.

8 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பிறகு 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.

1964ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக பிரிந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக சங்கரய்யா உள்ளார்.

1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த சங்கரய்யா, 1967ஆம் ஆண்டில் மதுரை மேற்கு தொகுதியில் இருந்தும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்தும் சட்டமன்றத்திற்கு தேர்வானார்.

அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்